காவலன் படத்தின் கிளைமாக்ஸை ஒட்டி மெலடி பாடல் ஒன்றை இயக்குனர் சித்திக் வைத்ததாகவும், கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் மெலடியை விட குத்துப் பாட்டு இருந்தால்தான் எனது ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்கள் என விஜய் மறுத்ததாகவும் சில நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் போது விஜய்யும், அசினும் ஆடிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் சுவாரஸியமான விஷயம்.
பூனா அருகிலுள்ள மலைத்தொடரில் சித்திக் ஒரு மெலடி பாடலை படமாக்கினார். விஜய், அசின் இருவரும் இதில் பங்கேற்றனர்.
படமாக்கப்பட்டது மெலடிப் பாடல்தான் என்று உறுதிப்படுத்தியவர்கள், அது கிளைமாக்ஸுக்கு முன்பு வரும் பாடலா என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டதாக தெரிகிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire