நடிகர் விஜய்யும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முன்பு போல் இணக்கமாக இல்லையாம். காவலன் படத்தை சன் பிக்சர்சுக்கு விற்க கூடாது என்று கூறிவிட்டாராம் விஜய். அதற்கு காரணமும் இருக்கிறது. இவர் நடித்த வேட்டைக்காரன் படத்தை குறிப்பிட்ட நேரத்தில் ரிலீஸ் செய்யாமல் பல மாதங்கள் இழுத்தடித்தார்கள் என்பதால்தான் இந்த கட்டளை.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் காதுகளை சென்றடைந்து விட்டது. இதனால் கோபமுற்ற நிறுவனம், விஜய் படம் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆடுகளம் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம். இந்த போட்டியில் தனது படம் தள்ளிப் போகுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
ஏனென்றால் பைனான்ஸ் மற்றும் வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான சில சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் காவலன் படத்தை வெளியிட ஆறு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது கோர்ட். அப்படியே படம் வெளி வந்தாலும், அந்த நேரத்தில் அசின் மேட்டரை கிளப்பிவிட்டு இன்னும் சிக்கல் ஏற்படுத்தவும் ஒரு கூட்டம் தயராகிக் கொண்டிருக்கிறதாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire