மீடியாவை பெரிதும் மதிக்கும் விஜய்யை இவ்வாறு விமர்சிப்பது ஏன்?
சமீப காலமாக விஜய் மீது ஊடகங்களின் கருத்து மிகவும் மோசமாகவுள்ளது. எனனில்
தொடர்ந்து அவரது படங்கள் சரியாக ஓடவில்லை. இது விஜய்க்கு புதிது இல்லை.
ஆனால் இப்போது விஜய் தனது ஸ்டைல் ய் மாற்றி ரீமேக் பாதை இல் படம்
நடிக்கிறார். வெற்றி , தோல்வி என்பன சகஜம் என்பது அவரது சினிமா வாழ்க்கை
உதாரணமாகும்.
அடடா… இந்த ரசிகனுங்களுக்கு வேலையே இல்லையா என்று நீங்கள் சலித்துக் கொள்வது தெரிகிறது.
ரசிகர்கள் என்பவர்கள் தனி ஜாதியல்ல. உங்களில் நம்மில் நமக்குள்
உள்ளவர்கள்தான் ரசிகர்கள். ரசிகன் என்பவனை குறை சொல்வது நம்மை நாமே
திட்டிக் கொள்வதற்கு சமம்.வேலை வெட்டி ஏதுமில்லாத கூட்டம் அது என்று சாதாரணமாக சிலர் சொல்லிவிடக் கூடும். வெட்டித்தனமாக எதையும் நாம் செய்யவில்லை. அடுத்தவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் பயன்பட, ஒரு நல்ல இளைஞரின் பின்னால் அணி திரள்வதில் என்ன தவறு?
பிடித்த ஒருவரை தலைவராகக் கொள்வதில்லையா? அப்படித்தான் இதுவும்.
சமீப காலமாக வலைப்பூக்கள், இணையதளங்கள் என எந்தப்பக்கம் பார்த்தாலும்
நடிகர் இளையதளபதி விஜய் அவர்களைப் பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்கள்,
பொய்யான குற்றச்சாட்டுகள், மனம் புண்படுத்தக் கூடிய வகையிலான எள்ளல்
கட்டுரைகளே ஆக்கிரமித்திருப்பதைக் காண முடிகிறது.
மீடியாவை பெரிதும் மதிக்கும் விஜய்யை மீடியா இந்த அளவு தாக்குவது ஏன்?
மேலும் காவலன் , வேலாயுதம் என நல்ல
கதையம்சம் உள்ள படங்களை தெரிந்து நடிக்கிறார். எனினும் விஜய் மீது
ஊடகங்களின் கருத்து மிகவும்மோசமாகவுள்ளது அவரை பற்றி 90 % தவறான
கருத்துக்களை பரப்புகின்றன. அவரை ஊக்குவிக்கும் முகமாக எந்த
கருத்துக்களையும் வெளியிடுவதில்லை.
சுறா படத்தின் விமர்சனத்தின் போது
விஜய்க்கு நடிக்கதெரியாது என எழுதினர். ஆனால் சிறந்த நடிகர் விருதுகளை
பெற்றுள்ளார் .சமீப காலமாக அவர் தேர்ந்து எடுக்கும் கதைகள் அவரது
நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமையவில்லை என்பதே காரணமாகும்.“நாயகனுக்குரிய
கட்டுமஸ்தான உடலோ, கவர்ந்திழுக்கும் முகத் தோற்றமோ விஜய்க்கு இல்லை” என்று
சில விமர்சகர்கள் அப்போது வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
“காதலுக்கு மரியாதை” வெளிவந்த பிறகுதான் விஜய்யை குறைத்து மதிப்பிட்டவர்கள்
மூக்கின் மீது விரல் வைத்து, எழுதுகோலை மாற்றி கொண்டார்கள்அதை நன்றாக விமர்சகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் .
ஊடகங்கள் நடுநிலையான கருத்துக்களை தெரிவிப்பதை விட்டு பக்கச்சார்பான கருத்துக்களை வெளியிடுகின்றன என்பது வருத்தம் அளிக்கிறது .இவ்வாறு
விமர்சிக்கும் நண்பர்களே..! நடுநிலையான ,நாகரிகமான கருத்துக்களை
வெளியிடுங்கள்.இதையே மக்கள் விரும்புவர்ர்கள்.இதை செய்வதன் மூலம் அந்த
தேவையற்ற விமர்சனங்களை நண்பர்கள் தவிர்க்கக் கூடும் என்பது நம் கருத்து.
ஒரு மனிதனைப் பற்றி எதுவும் தெரியாமலே விமர்சிப்பவர்கள், நன்கு தெரிந்த
பிறகு நிச்சயம் தெளிந்து விடுவார்கள் அல்லவா!
விஜய் என்பவர் யாருக்கும் போட்டியல்ல… அவருக்கு யாரும் போட்டியாகவும்
முடியாது என்ற முக்கியமான உண்மையை இங்கே பதிவு செய்து, நமது சொந்த வழியில்
பயணத்தைத் துவங்குகிறோம்.
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள், அவரை நேசிக்கும் நடுநிலை ரசிகர்கள்,
வெளியில் விமர்சித்தாலும் மறக்காமல் அவரது படங்களுக்கு ஆதரவு தரும் தமிழ்
விமர்சகர்கள், விஜய்யின் மனங்கவர்ந்த நாளைய இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி!
Aucun commentaire:
Enregistrer un commentaire