விஜய் - சித்திக் டீம் நினைத்திருந்தால் காவலன் படத்தை தீபாவளிக்கே திரைக்குக் கொண்டு வந்திருக்கலாம். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடியவில்லை என்றாலும் இம்மாத இறுதியிலாவது வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் டிசம்பரில் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியாக இருந்த விஜய், இப்போது பொங்கலுக்குத் தள்ளி வைத்தால் என்ன என்ற பெரிய குண்டை தூக்கிப்போட கதறிவிட்டாராம் படத்தை வாங்கிய சக்தி சிதம்பரம். ‘ஏன் பயப்படுறீங்க? இந்தமுறை சொல்லி வச்சு அடிக்கலாம்’ என்று விஜய் தைரியம் தந்தாலும், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் குறிப்பாக வானம், கோ என்று பல படங்கள் இருப்பதால் யோசித்துதான் செய்ய வேண்டும் என்று கண்டிஷனாகச் சொல்லி விட்டாராம். சக்தி சிதம்பரமோ, “நாம் ரிலிஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால் பலர் விலகிப்போய்விடுவார்கள்” என்று கெஞ்சியதாகத் தகவல் கிடைக்கிறது.
விஜயின் ஆறு படங்கள் சரியாகப் போகவில்லை என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்திய நிலையில், இந்தப் படத்தை எப்படியும் வெற்றி படமாக்கியே தீரவேண்டும் என்று நினைக்கிறார் விஜய். இதனால் ஒரு சண்டைக்காட்சியை ரீ ஷுட் செய்யலாமா என்று டிஸ்கஸ் செய்து வருகிறார்களாம். ஆனால் சித்திக்கோ நம்ம கூட்டணியில் ப்ரெண்ட்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படம் வெளியானது டிசம்பர் மாதம்தான். சென்டிமெண்டாக டிசம்பர் ரிலீஸை இழக்க வேண்டாம் என்கிறாரம். விவகாரம் இப்போது எஸ்.ஏ.சியின் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறதாம்.
என்ன தீர்ப்பு கிடைக்குமோ?
Aucun commentaire:
Enregistrer un commentaire