vendredi 31 décembre 2010
கனல் கண்ணனிடம் உதவி கேட்ட ஏ. ஆர். முருகதாஸ்!!!
சமிபத்தில் நடந்த சங்கரன் கோவில் இசை வெளியிட்டு விழாவில் ஏ. ஆர். முருகதாஸ் கூறினர் : "தான் கனல் கண்ணனிடம் ஒரு உதவி கேட்டாரம். விஜய்க்காக ஒரு action கதை வைத்திருக்கிறேன் அதை நான் விஜயிடம் சொல்ல வேண்டும் அதற்கு நீங்கள் தான் உதவி பண்ண வேண்டும் என்று.அதன் பின் கனல் கண்ணனிடம் கதை சொன்னாரம் ஏ. ஆர். முருகதாஸ்.அந்த கதையை கேட்ட கனல் கண்ணன் oh கதை நன்றாக இருக்கு என்று சொன்னாரம்.இதை பற்றி விஜயிடம் பேச்சு வரத்தை நடந்ததாம்.ஆனால் விஜய் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அதை பண்ண முடியாமல் போய் விட்டதாக சொன்னார் ஏ. ஆர். முருகதாஸ்".அப்ப வெகு விரைவில் விஜய் - ஏ. ஆர். முருகதாஸ் கூட்டனி வரும் என எதிர் பார்க்கலாம்.விஜய் ரசிகர்கள் ஆகிய நாங்கள் விஜய்க்கு இந்த ஆண்டு நன்றாக அமையா வேண்டும் என்று இறைவனை பிரத்திப்போம்.
விஜய்க்கு அபிமான தமிழ் நடிகர் விருது
ஒவ்வொரு வருடமும் முதனிலை மலையாள பத்திரிக்கையான Mathrubhomi daily மற்றும் பிரபல மலையாள தொலைக்காட்சியான Asianet for movies ஆகியன இணைந்து ஒரு விருது வழங்கும் விழாவினை நடத்துகிறது. அடுத்தவருடம் ஜனவரி 9ம் திகதி இவ்விழா நடைபெறுகிறது. இதில் இளையதளபதி விஜய் வேட்டைக்காரன் படத்துக்காக சிறந்த தமிழ் அபிமான நடிகர் என்னும் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஆம் கேரளாவில் ஏனைய மலையாள முன்னணி நடிகர்களின் படத்தினை விட நம்ம தளபதியின் படமான வேட்டைக்காரன் பாக்ஸ்ஆபீசில் மிகப்பெரும் ஹிட்டானது...
நம்ம தளபதி தமிழ்நாட்டையும் தாண்டி கேரளாவிலும் விளையாடுகிறார்.
Vijay’s clash with the Titans
There are four releases lined up for Pongal – Ilaignan, Siruthai, Aadukalam and Kavalan. Of these four films, Ilaignan has been certified by the Censor Board with a U certificate.
Ilaignan has lyricist Pa. Vijay playing the lead while Siruthai, Aadukalam and Kavalan are the heavy weights with leading heroes of Kollywood - Karthi, Dhanush and Vijay playing the lead roles respectively.
Despite three films releasing with top stars, Ilaignan’s prospects seems to be bright as it is banking on the Tamil Nadu CM M. Karunanidhi’s backing, as it is written by him.

Rajini and Vijay – history repeats
The film industry is a place full of uncertainty. Some years ago, the tiff between Rajini and the then Chief Minister of Tamil Nadu J Jayalalithaa was the talk of the town and during the elections Rajini fans played a vital role in ensuring that the AIADMK did not return back to power.
Vijay seems to be in a similar situation now, only that it is affecting his film career in the most drastic way. The Ilayathalapathy is facing a problem over releasing his Kavalan with most theatres declining to screen the movie citing various reasons.
Further, Vijay’s father SA Chandrasekar’s meeting with the AIADMK supreme J Jayalaithaa has raised a hope that the actor may enter politics and this has his fans gearing up to lobby against the ruling party government.
Vijay, Karthi and Dhanush to battle
Ilaignan, Kaavalan, Siruthai and Aadukalam have now been confirmed for Pongal releases. Earlier, there was a speck of doubt about Siruthai making it for Pongal but the latest from the camp is that the film is ready and raring to hit the screens.
So, it’s Karthi, Vijay and Dhanush competing this time and the movie buffs are waiting to know the final outcome. The countdown has begun and the D-day is not far off!
Kaavalan has its own set of problems especially in finding theatres while Siruthai and Aadukalam are having a smooth sail. Ilaignan on the other hand is backed by the TN CM as it is based on a novel penned by him.
jeudi 30 décembre 2010
சட்டம் என்ன செய்யும்-இணைந்த விஜய், சீமான்!
விஜய்யும் சீமானும் ஏற்கெனவே கூட்டணி போட்டுவிட்டார்கள் “பகலவன்” படத்துக்காக. விஜய்யின் அரசியலுக்கு சரியான களம் அமைத்துத் தர சீமான் இந்தக் கதையை பக்காவாகத் தயார் செய்திருக்கிறாராம். இன்னொரு பக்கம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் அடுத்த படத்தின் ஹீரோவுக்கு நிகரான புரட்சிகரமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சீமான். இந்தப் படத்தின் பெயர் சட்டப்படி குற்றம் என்று முதலில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அதை சட்டம் என்ன செய்யும் என்று மாற்றியுள்ளாராம் எஸ்ஏசி.
விஜய்-சீமான் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு முன்பே இந்தப் படத்தை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக சட்டத்தைச் சாடும் வசனங்களை அதிகமாக வைக்கும் எஸ்ஏசி, இந்தப் படத்தில் இப்போதைய சூழலில் தாங்கள் அனுபவிக்கும் சங்கடங்களை மனதில் கொண்டு அரசியலையும் ஒரு பிடிபிடிக்கப் போகிறாராம். அதற்கு தோதாக சீமானும் இருப்பதால், அரசியல் அனல் பறக்கும் இந்தப் படத்தில் என்கிறார்கள் ஏஸ்.ஏ.சந்திரசேகர் வட்டாரத்தில்.
சரி… படத்தில் விஜய் உண்டா ? ஒரு காட்சியில் சீமானுடன் விஜய் தோன்றுவது போலதிட்டமிட்டுள்ளனராம்.
துரதிஷ்டவசமாக சச்சின் தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் அதன் மேக்கிங்கிற்காக அந்தப் படம் பேசப்பட்டது. இப்போது விஜய் சாருடன் வேலாயுதம் படத்தில் நடிகிறேன். இதுவும் டோலிவுட்டில் பெரிய ஹிட் படம்தான். ஹன்சிகாவும் ஸ்கீரீன் ஸ்பேஸை என்னோடு பகிர்ந்துகொண்டாலும் என் கேரக்டர் துறுதுறுப்பாக இருக்கும்.
mercredi 29 décembre 2010
கல்லா கட்டுமா காவலன்
நடிகர் விஜய்யை கலாய்த்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் பதிவுலக காமெடிகளும் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் நக்கலை எல்லாம் ஓரம்கட்டிவிட்டி காவலன் படம் வெற்றி பெறுமா என்பது குறித்த ஒரு நடுநிலைப் பார்வை.
முதலில் எப்படியிருக்கிறது பாடல்கள்:
விஜய் படங்கள் எப்படி இருந்தாலும் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அதிலும் வித்யாசாகர். விஜய்யை பொறுத்தவரையில் ஏ.ஆர்.ரகுமான் இசைகூட சறுக்கிவிட்டது. ஆனால் வித்யாசாகர் இசை சறுக்கியதில்லை.
இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.
- “விண்ணைக் காப்பான் ஒருவன்...” பாடலைக் கேட்டவுடனேயே இது ஒப்பனிங் சாங் என்று எளிதாக கூறிவிடலாம். வழக்கமான ஒன்றே தவிர புதுமைகள் ஒன்றுமில்லை.
- ஐந்தில் என்னுடைய பேவரிட் “சட சட...” பாடல்தான். வித்தியாசமான டெக்னோ இசை. க்ளப் சாங் போல படமாக்கியிருப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.
- “ஸ்டெப் ஸ்டெப்...” பாடலில் விதவிதமான ஸ்டெப்களை விஜய்யிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம். அவரது நடனத்திறமைக்கு சவால்விடும் பாடல்.
- “யாரது...” மற்றும் “பட்டாம்பூச்சி...” பாடல்கள் டூயட் வகையறா. ஏதோவொரு மலைமுகட்டில் நின்று பாடுவாடு போல என்மனவானில் காட்சி விரிகிறது.
காவலன் படத்தின் கதை:
இந்தப் படம் மலையாள ஹிட் படமான பாடிகார்ட் படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அந்தப் படத்தை தரவிறக்கி பார்த்தேன். சப் டைட்டில் இல்லாமலே புரிந்தது. அதன் கதை பின்வருமாறு.
ஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.
கொஞ்சம் விரிவாகச் சொன்னால்,
ராஜ்கிரண் கட்டப்பஞ்சாயத்து வகையறா ரவுடி கம் தொழிலதிபர். ஆனால் நல்லவர் (!!!). அவரை ரோல்மாடலாக கருதி அடியாளாக இணைகிறார் ஹீரோ விஜய். ராஜ்கிரணின் மகளான அசினை பாதுகாக்கும் பொறுப்பு விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அசினின் தோழியாக இரண்டாம் நாயகி மித்ரா. (தமிழில் சகோதரி என்று நினைக்கிறேன்). அசின் – விஜய் மறுபடியும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் ஒரு காதல். ராஜ்கிரண் விஷயம் தெரிந்து சூடானாரா இல்லை காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டினாரா, விஜய்யும் அசினும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.
பழைய கள்ளுதான் என்பது தெளிவாக தெரிந்தாலும் மலையாளத்தில் இதை ஒரு மெல்லிய காதல் படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழில்...?
வித்தியாசமாக இருக்கும் என்று மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் சொல்லக்கூடும். ஆனால் விஜய் வழக்கமான அவரது பார்முலாப்படி திரைக்கதையில் நிறைய மாற்றங்களை புகுத்தியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங் செய்துக்கொண்டு வருவார்.
படத்தில் காமெடியனாக வடிவேலு. விஜய் – வடிவேலு காம்பினேஷன் நிறைய படங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது எனினும் வில்லு படத்தில் பயங்கர சொதப்பல். சுறா படத்திலும் சுமார் ரகமே. வசீகரா படத்தில் அமைந்தது போல காமெடி காட்சிகள் அமைந்தது என்றால் நிச்சயம் காமெடியில் காவலன் கலக்கும்.
விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் படத்தை பாதிக்கும் ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அதிலும் விஜய் அம்மா பக்கம் சாய்வது போல இருப்பதால் ஆளும் கட்சி படத்தை முடக்க முயற்சிக்கும். கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை இருட்டடிப்பு செய்வார்கள். அதற்கு பதிலாக ஜெயா டிவி காவலனை விளம்பரப்படுத்தலாம். ஆனால் இப்போ ஜெயா டிவிஎல்லாம் யார் பார்க்கிறார்கள்.
விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், விஜய் எதிர்ப்பாளர்கள் இவ்வளவையும் மீறி காவலன் வெற்றிபெற வேண்டுமென்றால் அது முழுக்க முழுக்க உண்மையான விஜய் ரசிகர்களிடமே இருக்கிறது.
விஜய்யின் காவலனுக்கு 70தியேட்டர்கள்
பொங்கல் அன்று விஜய்யின் "காவலன்" படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தை திரையிட 70 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளனவாம். அதுவும் சுமாரான தியேட்டர்கள் தானாம்.
விஜய்-அசின் நடித்து, டைரக்டர் சித்திக்கின் இயக்த்தில் உருவாகியுள்ள "காவலன்" படத்திற்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கின்றன. முதலில் இம்மாதம் டிச., 17ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் தியேட்டர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பொங்கலுக்கு இப்படத்தை திரையிட உள்ளனர். ஆனால் இப்போதும் தியேட்டர் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தியேட்டர் அதிபர்கள் உடனான பிரச்சனை தானாம்.
விஜய்யின் சமீபத்திய படங்கள் சரியாக ஓடாததால் தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் நஷ்டத்திற்கு நடிகர் பொறுப்பேற்க முடியாது என்று ஏற்கனவே விஜய் கூறிவிட்டார். இதனையடுத்து விஜய் படத்தை இனிமேல் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
இதனிடையே இப்படத்தை வாங்கியுள்ள சக்தி சிதம்பரம் தமிழகம் முழுவதும் 400தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளார். ஆனால் 70தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதுவும் சுமாரான தியேட்டர் தான் என்று கூறப்படுகிறது. இதனால் காவலன் படத்திற்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம் சிறுத்தை, இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளது.
Vijay’s Kaavalan gets only 70 theatres
Kaavalan which has Vijay and Asin in the lead roles is to be released for Pongal. But only 70 theatres are available for the screening of this film and that also, these theatres are ordinary ones.
Kaavalan is a film which has Vijay and Asin in the lead roles and is directed by Siddique. Right from beginning this film has been facing lots of obstacles and problems. Now this film was supposed to be released on 17th of this month.
But since there was dearth in the theatres, this release was postponed to Pongal. But now also this film is not getting theatres. The reason for this is the theatre owners. The Theatre Owners are claiming compensation from Vijay since some of his recent films did not do well at the box office. But Vijay said that he is not responsible and so there is no question of compensation. Now the theatre owners are refusing to screen Vijay’s films.
Sun bags Kavalan
Looks like Sun Pictures has bagged the rights of Kavalan. There were reports just a few days ago that Jaya TV may procure the rights following SA Chandrasekar’s meeting with the AIADMK leader J Jayalalithaa.
But the film’s distributor Shakthi Chidambaram has now revealed that he had sold the satellite rights of this Vijay-starrer to Sun Pictures.
Despite the satellite rights sbeing sold, there is still no news about Kavalan’s release. Though the filmmakers have said that it would be out for Pongal 2011 there is no sign of it happening till now.

தளபதிக்கு தல சொன்ன அட்வைஸ்!
விஜய்யின் “காவலன்” வெளிவர முடியாத அளவிற்கு… தியேட்டர்கள் கிடைக்காத அளவிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள்… ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல்… ஈரோட்டில் நடக்கயிருந்த தன் ரசிகர் மன்ற நலத்திட்டம் வழங்கும் விழாவை போலீஸார் மூலம் தடுத்து நிறுத்திய அரசியல் குறுக்கீடுகள்… போன்ற நெருக்கடிகள் விஜய்யை சுற்றிக்கொண்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்த விஜய்யை சந்தித்திருக்கிறார் அஜீத். அப்போது விஜய்யிடம், “உங்களோட அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சக நடிகனா நான் உங்களுக்கு இதச் சொல்றேன். அதே சமயம், உங்களோட நண்பனா நான் சொல்லணும்னா… உங்களோட அரசியல் ஆர்வம் உங்களோட மனநிம்மதியை கெடுக்குதுன்னா… அப்படிப்பட்ட அரசியலே வேணாம் நண்பா” என்று ஒரு நண்பனாக… சக நடிகனாக விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் அஜீத். இந்த செய்தி இந்தவாரம் நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது.
தள்ளி நிற்கும் தல-துள்ளி வரும் தளபதி!
ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததிலிருந்தே அதிகாரம் படைத்தவர்களின் பலமுனை நெருக்கடிக்கு ஆளானார் விஜய். அதனால்தான் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து அரசியல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தார் விஜய். அதனால் நெருக்கடிகள் தொடர்ந்தது. அந்த நெருக்கடிகளின் தொடர்ச்சிதான் விஜய்யின் “காவலன்” வெளிவர முடியாத அளவிற்கு…. தியேட்டர்கள் கிடைக்காத அளவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல்.
இனி பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டவுடன்தான் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜெவுடனான சந்திப்பிற்குப் பிறகு தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கு கொடுத்து வந்த நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து “காவலன்” படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.
பொங்கலுக்குப் பிறகு… திருச்சியில் “விஜய் மக்கள் இயக்க மாநாடு” நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்பாக இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார் விஜய். அந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு என்னென்ன மாதிரியான நலத்திட்ட உதவிகளைச் செய்யலாம்? தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக எப்படிப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொள்வது? என்பது குறித்தும் முடிவெடுக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவெ ஈரோட்டில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை போலீஸார் தகுந்த பாதுகாப்பு தராததால் அதைவிட பிரமாண்டமாக அதே ஈரோட்டில் இந்த மாநாட்டை நடத்தலாம் என்கிற கருத்தும் விஜய் வட்டாரங்களில் நிலவிவருகிறது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல… வெளி நாட்டிலிருந்து திரும்பியிருக்கும் விஜய் வெகு விரைவில் ஜெயலலிதாவை சந்திக்கவிருக்கிறார்.
ஜெயலலிதா விரும்பும் பட்சத்தில்… விஜயகாந்த்திடமும் பேசி அவரை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவரும் வேலையைச் செய்ய எஸ்.ஏ.சந்திரசேகர் தயாராக இருக்கிறார். இப்படி நேரடியாக தி.மு.க.விற்கு எதிராக விஜய் களமிறங்கியதோடு சினிமா மூலமும் தன் எதிர்ப்பை காட்டவிருக்கிறார்.
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் “பகலவன்”. இந்தப் படத்தில் தி.மு.க. விற்கு எதிரான விஷயங்களை பஞ்ச் டயலாக்காக பேசவிருக் கிறார். சீமானும் காங்கிரஸுக்கு எதிரான முழக்கங்களை படத்தில் சேர்க்கிறார். ஆக அனல் அடிக்கும் கதை, தங்களின் கோபத்தை காட்டும் கதை என்பதால் படத்திற்கு “கோபம்” என பெயர் சூட்டலாமா? எனவும் ஆலோசித்து வருகிறார் சீமான். காங்கிரஸ் நிற்கும் இடங்களில் எல்லாம் நாம் தமிழர் இயக்கம் காங்கிரஸை தோற் கடிக்க கடுமையாக பிரச்சாரம் நடத்தும் என சீமான் அறிவித்திருப்ப தால், அ.தி.மு.க. பிரமுகர்கள் குஷியாக சீமானிடம் பேசிவருகிறார்கள். “அண்ணே… உங்களுக்கு ஆதரவா எதையும் செய்வோம்” எனச் சொல்லி வருகிறார்கள்.
இப்படி சினிமாக்காரர்களின் அரசியல் அதிரடி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்… “என்னை அரசியலுக்கு வா என தொல்லை கொடுத்தால் ரசிகர்மன்றத்தையே கலைத்து விடுவேன்” என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார் அஜீத். இந்த அறிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
ஜெயலலிதாவின் அன்பிற்குரியவராக அஜீத் இருந்தாலும் அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்கப்போவதால் “நம்ம தலயும் அரசியலில் இறங்கணும்” என அஜீத்தை நச்சரிக்கிறார்கள். அஜீத் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் ரசிகர்கள் கூடி ‘அரசியலுக்கு வரணும்’ என ஆர்ப்பாட்டம், கோஷம் என அமளி பண்ணுவதோடு ரகசிய ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகிறார்கள். இதனால் அவ்வப்போது ரசிகர் மன்றத்தினரை கூப்பிட்டு அஜீத் கடிந்துகொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்ட அஜீத் ரசிகர் மன்றத்தினரில் ஒருபிரிவினர் பல்லாவரத்தில் ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் அரசியலுக்கு அஜீத் வரணும் என தீர்மானம் நிறைவேற்றத் தயாரானார்கள். இது அஜீத்தை டென்ஷனாக்கிவிட்டது. “எனது கொள்கைக்கு மாறாக எனது ரசிகர் மன்றத்தினர் செயல்பட ஆரம்பித்தால் உடனடியாக அஜீத் ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுவேன்” என அறிக்கைவிட்டு எச்சரித்தார் அஜீத். இதையடுத்து அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘உங்கள் எண்ணப்படி செயல்படுவோம். மன்றங்களை கலைக்காதீர்கள்’ என அஜீத்திற்கு உறுதியளித்திருக்கிறார்கள்.
“மன நிம்மதியை அரசியல் கெடுக்குமானால் அப்படிப்பட்ட அரசியல் எதுக்கு உங்களுக்கு?” என விஜய்க்கு ஆலோசனை சொன்ன அஜீத் அரசியலில் எப்படி ஈடுபடுவார்? என்கிறார்கள் தலைமை மன்ற பிரமுகர்கள்.
அனல் பறக்கும் சீமான் படப்பிடிப்பு!
சிறை மீண்ட சீமான் ஒருபக்கம் அனல் பறக்கும் அறிக்கைகளை விட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் பட வேலைகளில் செம பிஸியாகி இருக்கிறார். சீமானின் ஐந்து முக்கிய உதவியாளர்கள், சீமான் சிறையில் எழுதி முடித்த திரைக்கதையைப் படித்து விவாதித்துவருகிறார்கள்.
இதற்கிடையில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சீமான் நடித்துவரும் சட்டப்படி குற்றம் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ.வி.எம் ஸ்டியோவில் நடந்துவருகிறது. இதில் சீமான் வழக்கறிஞர் பாத்திரத்தில் பிரமாதமாக நடித்துவருவதாகத் தகவல் கிடைக்கிறது. ஒவ்வொரு டேக்கிலும் மொத்தப் படக் குழுவும் கைதட்டி பாராட்டுகிறதாம். அத்தனை சூடாக இருக்கிறது சீமானின் நடிப்பு என்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு சட்டம் என்ன செய்யும் என்ற தலைப்பையும் இயக்குனர் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்கிறார்கள். கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு மாறலாமாம். இந்தப் படத்தில் நடித்து முடிக்கும் சீமான் அடுத்து ராமன் தேடிய சீதை படத்தை இயக்கிய ஜெகன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகே விஜய் நடிக்க இருக்கும் பகலவன் படத்தை இயக்குவார் என்கிறார்கள்.
சன்னிடம் சரண்டர் ஆன விஜய்
விஜய் நடித்த “காவலன்” படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம். “காவலன்” படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. டிசம்பரில் ரிலீஸ் தேதி குறித்தும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் என்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பில்.
காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேடி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ்.ஏ.சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார். இதைத் தொடர்ந்து “காவலன்” படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.
இந்தப் படத்தை ரூ.42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சக்தி சிதம்பரம்.
mardi 28 décembre 2010
உண்மையில் வேலாயுதம் ரீமேக் படமா?
வேலாயுதம் ரீமேக் அல்ல என்று தொடக்கத்தில் கூறிவந்த இயக்குனர் ஜெயம்ராஜா, படத்தொடக்க விழாவில் வேலாயுதம், ஆஸாத் தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் என்பதை ஒப்புகொண்டார்.
ஆனால் ஆசாத் படம் பத்து வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு உள்ளதால் அதன் பிரதான கதைக் கருவை மட்டும் பயன்படுத்தி திரைக்கதையை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார். இதில் பல திருப்பங்களும் விறுவிறுப்பான காட்சிகளும் உருவாக்கப் பட்டுள்ளது. ஆசாத் படத்தில் உள்ள பாதி காட்சிகளை மட்டுமே பயன்படுத்த உள்ளாராம் ராஜா. மீதி விஜய்க்காக ஸ்பெஷலாக இவரே உருவாக்கிய ஸ்பெஷல் காட்சிகள் என்கிறார்.
விஜய் நடிக்கும் படங்களில் பெரிய பட்ஜெட் படம் இதுவாகும்,மேலும் ஹாலிவூட் பாணியில் அமைந்த சண்டைக் காட்சிகளுடன் வரும் கோடை விடுமுறைக்கு மிரட்ட வருகிறான் வேலாயுதம்.
lundi 27 décembre 2010
ஃபெப்ஸி விஜயனின் புதிய அவதாரம்!
திரைப்பட தொழிலாளர் சம்மேளனமாகிய ஃபெப்ஸியின் நிர்வாகக் குழுவில் 15 ஆண்டுகள் சக்திமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஃபெப்ஸி விஜயன். அடிப்படையில் ஸ்டன்ட் கலைஞரான விஜயன், சங்கத்தில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் கடந்த சங்கத் தேர்தலில் தோல்விடைந்தார். யார் தோற்றாலும் ஃபெப்ஸி விஜயன் தோற்க மாட்டார் என்பதுதான் பேச்சாக இருந்தது. தற்போது தனது தோல்வியையே வேறுவிதமாக பயன்படுத்திக்கொண்டிருகிறார் விஜய ன். யெஸ்! முன்பு சங்கத்தலைவராக இருந்தபோது சங்கத்துக்கே அதிக நேரம் செலவழித்து வந்த விஜயன், இளையதளபதி விஜயின் ஆஸ்தான ஸ்டன்ட் மாஸ்டராகவும் இருந்து வந்தார். ஆனால் சூப்பர் சுப்பராயன் திடீரென்று அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ள, இப்போது நிறைய நேரம் கிடைத்து விட்டது விஜயனுக்கு. இதனால் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜயன்.
இவர் நினைத்தால் இளைய தளபதி விஜயின் கால்ஷீட் பெற்று படம் இயக்க முடியும். ஆனால் தனது மகனையே ஹீரோவாக்கி சத்தமில்லாமல் மொத்த படத்தையும் எடுத்து முடித்து விட்டார். எடுத்த எடுப்பிலேயே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படத்தை இயக்கியிருக்கும் விஜயன் விரைவில் இந்த படத்தைப் பற்றி மீடியாவுக்கு அறிவிக்கலாம். ஆனால் அதற்கு முன்பு நமக்கு கிடைத்த செய்தி, நெத்தியடி அடிக்கிற ஃபெப்ஸி விஜயன் தனது முதல் படத்தில் துளிக்கூட ஆக்ஷன் வைக்கவில்லையாம்! மகனை வைத்து மென்மையான காதல் கதையை இயக்கி இருக்கிறாராம். சூப்பர் பன்ச்சா இருக்கே!

Kaavalan in Jaya’s court?
Jaya TV is reportedly considering buying the satellite rights of Kaavalan. The talks are still in the nascent stages and the outcome will be known shortly, says our sources. Kaavalan’s release has been marred by several uncertainties and finally the movie’s release date has been scheduled for January 14th, 2011.
The tinsel town is abuzz with news that Vijay may campaign for Jayalalithaa’s AIADMK and his father’s meeting with the leader has also raised the speculation.
And now the news about Jaya TV planning to buy the satellite rights of Kaavalam is only indicating the close proximity that Vijay enjoys with the AIADMK.
dimanche 26 décembre 2010
கண்ணபிரான் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
இயக்குனர் அமீர் சமீபத்தில் ஆனந்த விகடன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது கனவுப்படமான கண்ணபிரானில் விஜய் தன் ஹீரோ என உறுதி செய்துள்ளார் அமீர்.இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட அமர் ரெடி.அத்துடன் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக தெருவித்திருக்கிறார் அமீர். விஜயும் யுவனும் இரண்டாவது முறையாக இணைகிறார். விஜயும் யுவனும் இனனைத்து நடித்த முதல் படம் புதிய கீதை.கண்ணபிரான் படம் ஒரு வன்முறை இல்லாத மதுரையை நீங்கள் பார்க்கலாம் என்று பதில் சொல்லி முடித்தார் அமீர்.
தளபதியா... கேப்டனா..? - அரசியல் கவுன்ட் டவுன் இனிதே ஆரம்பம்!
ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு சென்ற வார சென்சேஷன். ஏன் இந்த திடீர் சந்திப்பு? விஜய் சந்திரசேகரனுக்கு நெருக்கமான கோடம்பாக்கப் புள்ளியிடம் பேசினோம். ''விஜய் அரசியலில் இறங்குவது திடீர் முடிவல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு இது. அதற்கான வேளை இப்போது வந்து விட்டது. கிட்டத்தட்ட விஜய்யை அ.தி.மு.க பக்கம் கொண்டுபோய்க் கரை சேர்த்ததே தி.மு.க-தான். 'தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம்?’ என்று சர்வே எடுத்தபோது கிடைத்த பதில் 'விஜய்’. இந்தத் தகவல் ராகுலுக்குச் செல்ல விஜய்யை விரும்பி டெல்லிக்கு அழைத்தார். உண்மையில் விஜய்க்கு காங்கிரஸில் இணைய விருப்பமே இல்லை. இருந்தாலும் ராகுலை விஜய் சந்தித்தது ஆளும் கட்சிக்குப் பிடிக்கவில்லை. எனவே விஜய்க்குக் குடைச்சல் கொடுக்க ஆரம் பித்தார்கள்.
ஈரோடு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பாலாஜியின் கல்யாணம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதில் கலந்துகொள்ள விஜய் சென்றார். திருமணத்தை முடித்துவிட்டு மக்களுக்கு நலத் திட்டப் பணிகள் உதவிகள் வழங்கும் விழாவைப் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் நடத்த முடிவு செய்திருந்தார்கள் ரசிகர்கள். அலை அலையாகத் திரண்ட ரசிகர்களைக் கண்டு கதிகலங்கிப் போனார்கள் மாவட்ட தி.மு.க-வினர். ஏற்கெனவே 'கோவை மாவட்டத்தில் தி.மு.க வீக்’ என்று கோபத்தில் கருணாநிதி வேறு பேசியிருந்தார். உடனடியாக போலீஸ்காரர்கள் மூலமாக நலத் திட்ட விழா நடப்பதையே நிறுத்த முடிவு செய்தார்கள். ஆர்வமாக விழா மேடைக்கு கிளம்பிய விஜய்யைத் தடுத்து நிறுத்திய போலீஸார் ''கூட்டம் அதிகமா இருக்கு. நீங்க மேடைக்குப் போக வேண்டாம். மீறிப் போய் ஏதாவது அசம்பாவிதம் நடந்தா நாங்க பொறுப்பு இல்லை'' என்று கடுகடுத்தார்கள். விஜய்க்கு பாதுகாப்பும் தராமல் அவமா னப்படுத்தினார்கள். மேடைக்குச் செல்ல முடியாமல் தவித்த விஜய்அப்போதே ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளுக்குள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார். விழாவில் கலந்துகொள்ளாமலேயே கனத்த மனசோடு சென்னையும் திரும்பிவிட்டார்.
இன்னொரு பக்கம் சென்னை அண்ணா நகரில் விஜய்க்குச் சொந்தமான இடத்தில் கட்டட வேலை நடந்து வருகிறது. அங்கே தினசரி வரும் ஒரு தி.மு.க வட்டச் செயலாளர் கட்டட வேலை பார்ப்பவர்களை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு விஜய் ஆசையோடு இருந்த நேரத்தில் அவரைப் படத்தில் இருந்து நீக்கச் சொல்லி பிரஷர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று முடிவு செய்துவிட்டார் விஜய். இடையில் அ.தி.மு.க-விடம் இருந்து விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவான சிக்னல்கள் வந்துகொண்டே இருந்தன. தி.மு.க-வை எதிர்க்க அ.தி.மு.க-வோடு கை கோப்பதே சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்'' என்றார் அவர்.
விஜய் என்னதான் நினைக்கிறார்? அவரிடமே பேசினோம். ''சாதாரணக் குடும்பத்தில் பிறந்த என்னைத் தமிழக மக்கள்தான் பெரிய நடிகனாக ஆக்கி அழகு பார்த்தாங்க. அவங்களோட ஆசீர்வாதத்தில்தான் என் குடும்பமே வாழ்ந்துட்டு இருக்கு. என்னை வாழ வைக்கும் மக்களுக்கு நன்றிக்கடனா ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். அதனால் கண்டிப்பா அரசியலுக்கு வருவேன்'' என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.
ஜெ-வைச் சந்தித்துவிட்டு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் ''கடந்த 11-ம் தேதி சாயங்காலம் 4 மணிக்கு மேடத்தைச் சந்தித்தேன். மலர்ந்த முகத்தோடு வரவேற்றாங்க. 40 நிமிஷம் பல விஷயங்கள் பத்திப் பேசினோம். ஒரு நல்ல தலை வரைச் சந்திச்ச சந்தோஷம் என் மனசு பூரா இருக்குது. விஜய்க்கு தனியா அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. இன்றைய சூழ்நிலையை மனதில்கொண்டு மக்கள் இயக்கத்தின் மாநாட்டை ஜனவரி மாசக் கடைசியில் மதுரை அல்லது திருச்சியில் நடத்த இருக்கிறோம்'' என்று முடித்துக் கொண்டார்.
அ.தி.மு.க என்ன நினைக்கிறது? அ.தி.மு.க-வின் மூத்த புள்ளி ஒருவரிடம் பேசினோம். ''விஜயகாந்த்தோடு கூட்டணி வைக்கும் முடிவில்தான் அம்மா இருந்தார். ஆனால் விஜய்யின் வருகை அம்மாவை யோசிக்க வைத்துவிட்டது. ஏனென்றால் விஜயகாந்த்இ அ.தி.மு.க-வுக்குக் கட்டுப்பட்டு நடப்பாரா என்கிற கவலை அம்மாவுக்கு உண்டு. இதுபோக அம்மாவிடம் 60 ஸீட்டுகள் கேட்டு விஜய காந்த் டிமாண்ட் செய்கிறார். தே.மு.தி.க-வுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்று அம்மா யோசித்துக்கொண்டு இருக்கும்போதுதான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்து இருக் கிறது. அதிரடியான விஜயகாந்த் ஒரு பக்கம் இருக்க அமைதியான விஜய் வருகையை அம்மா ரொம்பவே ரசிக்கிறார். இளைஞர்களை அ.தி.மு.க பக்கம் ழுப்பதற்கு விஜய் நிச்சயம் பயன்படுவார் என்பது அம்மாவின் எண்ணம்.
விஜய்யின் வருகையைவைத்து விஜயகாந்த்தின் அதிகப் படியான ஸீட் டிமாண்டையும் காலி செய்து விடலாம் என்பதும் அம்மாவின் கணக்கு. விஜய்யை வைத்து விஜயகாந்த்தை வழிக்குக் கொண்டுவருவது சரத்குமாரை உள்ளே இழுப்பது என அடுத்தடுத்த அரசியல் மூவ்களில் ஆர்வமாக இறங்கிவிட்டார் அம்மா. எல்லாம் சரியாக நடந்தால் விஜய் - விஜயகாந்த் - சரத் என்கிற நட்சத்திர பலத்தைக்கொண்டு தி.மு.க-வை வீழ்த்துவது அம்மாவின் திட்டம். இதற்கு விஜயகாந்த்தின் ரியாக்ஷனைப் பொறுத்து அம்மாவின் திட்டங்கள் மாறும். விஜயகாந்த்துக்கும் தி.மு.க-வுக்கும் செக் வைக்கும் வகையில் விஜய் நடத்தும் மக்கள் இயக்க மாநாட்டில் அம்மா கலந்துகொள்வார் என்று நினைக்கிறேன்''- அர்த்தபுஷ்டியாகச் சிரிக்கிறார் அந்தப் புள்ளி.
ஆஹா... அரசியல் சூடு ஆரம்பம்!

samedi 25 décembre 2010
Vijay Antony Speak About Velayutham Movie
He tell velayutham audio release 2 or 3 month.
Yuvan is Music director for Kannabiran
YUVAN with IlayaThalapathy VIJAY - “KANNABHIRAAN"
Director AMEER confirmed in his latest interview in Ananthavikatan that Vijay is the Hero of the movie "KANNABHIRAN".
After Puthiya Geethai movie, KANNABHIRAN is SECOND movie in YUVAN + Vijay COMBO.
http://www.facebook.com/pa
Vijay and Suriya land Sarath Kumar in a controversy
hen Sarath Kumar made an announcement about the Celebrity Cricket League T20, he would not have realized that it would land him in a controversy among Suriya and Vijay fans.
The Nadigar Sangam President had stated that Suriya or Vijay would be the Icon Star of the team. This had created a huge discontentment among the Vijay fans as they rue that Sarath did not mention their idol’s name first.
In reply to this, Sarath has said that he mentioned the names in the alphabetically order and some miscreants are trying to rake up a controversy from it.

Vijay’s Kobam!
Seeman had announced that his next film with Vijay will start rolling at the earliest. He had made this statement soon after being released from jail and also disclosed that the entire script was penned when he was in prison.
An announcement was also made that the film has been titled as Pagalavan but sources say that Seeman is contemplating on changing the title to Kobam.
Meanwhile, there are reports that Kalaipuli S Dhanu who is supposed to produce this film is planning to opt out. Though Vijay and Seeman are tightlipped about this latest development, sources close to them say that they would go ahead with Kobam/Pagalavan at any cost.

vendredi 24 décembre 2010
காவலனைக் கைப்பற்றும் ஜெயா தொலைக்காட்சி
அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு என்னென்னவோ மாற்றங்கள் நடந்து வருகிறது. விஜய் இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டார் என்று சொன்னார் அவரது தந்தை. அது உண்மைதான்! ஆனால் காவலன் படத்தை ஜெயா தொலைக்காட்சிக்கு விற்பதன் மூலம் விஜய் ரசிகர்களின் வாக்குகளில் ஒரு குறிபிட்ட சதவிகிதத்தை அதிமுகவுக்கு ஆதரவாகத் திசை திருப்ப முடியும் என்று வியூகம் வகுத்திருக்கிறார்களாம்.
இந்த அடிப்படையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கே. முரளிதரன் தயாரிப்பில் வெளிவந்த ஆட்ட நாயகன் படத்தை ஜெயா டி.வி வாங்கியிருப்பதால் இதை முக்கியமான விஷயமாக கவனிக்கிறது திரையுலகமும், அரசியல் அரங்கமும்.
இடையில் படங்கள் வாங்குவதை முற்றாக நிறுத்தி வைத்திருந்த ஜெயா, ஆட்ட நாயகன் படத்தை வாங்கியதன் மூலம் தனது அரசியல் ஆட்டத்தைப் புத்திசாலித்தனமாக ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள். ஜெயா டி.வியின் மாற்றங்களில் மிக முக்கியமான மற்றொன்று ஜாக்பாட் நிகழ்ச்சியில் நதியாவை நீக்கிவிட்டு, நமீதாவை ஒப்பந்தம் செய்திருப்பது! இதற்காக பல மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் நமீதா, கோடியில் சம்பளம் பேசினாராம். நமீதாவை இனி அம்மா புகழ்பாடும் மச்சினியாக மாற்ற வேண்டும் என்பது ஜெயா டிவியின் கணக்கு. இன்று ஊடகம் இல்லாவிட்டால் அரசியல் இல்லை என்பதையே இந்த விளையாட்டுக்கள் காட்டுகின்றன.
இந்த சூடான ஆட்டம் ஒருபுறம் இருக்க வனிதா விஜகுமார் விவகாரத்தைக் கிழி கிழி என்று கிழித்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எதிராக நடிகர் சங்கம் தெரிவித்த புகாரின் அடிப்படையில் திரையுலக விழாக்களில் கலந்துகொள்ள இந்த டி.விக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதே காரியத்தை இதற்கு முன்பு செய்த டி.விக்களின் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையே!
மாமியார் உடைத்தால்...

விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்க அஜீத்துக்கும் நிர்பந்தம்
அரசியலில் குதிக்க நடிகர் விஜய் ஆர்வம் காட்டுவதை தொடர்ந்து அஜீத்தையும் அரசியலில் களமிறக்கி விட அவரது ரசிகர்கள் மூலமாக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டில் டெல்லி சென்ற விஜய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்ததை தொடர்ந்து அவர் காங்கிரசில் சேரப் போவதாக செய்தி பரவியது. பின்னர் அதுபற்றி தகவல் எதுவும் இல்லை.
கடந்த மாதத்தில், சென்னை வடபழனியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். தனிக்கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் சேர்வதா என்பது பற்றியும், ரசிகர் பலத்தை காட்டுவதற்காக பொங்கலுக்கு பிறகு திருச்சியில் மாநாடு நடத்துவது பற்றியும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது மகன் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சார வேலைகளை தொடங்கி விட்டார். ரகசிய சந்திப்புகள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். பரபரப்பான இச்சூழலில், அரசியலில் குதிக்குமாறு அஜீத்குமாரையும் அவரது ரசிகர்கள் நிர்பந்திக்கத் தொடங்கி உள்ளனர். ஆங்காங்கே ரகசிய கூட்டம் நடத்திய ரசிகர்கள் தங்களது விருப்பத்தை அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பல்வேறு மன்றங்களை சேர்ந்தவர்கள் அஜீத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து இதுபற்றி கூறினர்.
இது மன்றத்தினரிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் அஜீத்குமார் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அஜீத் கூறியிருப்பதாவது: எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள். என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற கணிப்பிற்கு மாறாக தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையை மீறி சுய விளம்பரத்துக்காக சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நான் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்.
எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன். இனிமேல் மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெடுதல், பொது மக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன். இவ்வாறு அஜீத் கூறியுள்ளார். அஜீத்தின் இந்த திடீர் எச்சரிக்கை, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபற்றி அஜீத் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் இன்று கூறியது: இரண்டு, மூன்று மாதங்களாகவே ரசிகர்கள் சிலர் அஜீத் பெயர், நன்மதிப்பை குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
‘விஜய் அரசியலுக்கு வருகிறார்; நம்ம ‘தல’ எப்போது அரசியலுக்கு வருகிறார்.. யாருடன் கூட்டணி பேசப் போகிறார்?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு நச்சரிக்கின்றனர். அஜீத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கும் ஒருபடி மேலே சென்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள மன்றங்களுக்கு போன் செய்து, ‘ஞாயிற்றுகிழமை அங்கே கூட்டம் நடக்கிறது.
அஜீத் வருகிறார். ஏற்பாடுகளை செய்யுங்கள்..’ என்று புரளி கிளப்பி குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்கள் அவரது மனதை புண்படுத்தி இருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவும், மக்களுக்கு எந்த இடையூறும் ரசிகர்களால் ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே இப்படியொரு அறிக்கையை அஜீத் வெளியிட வேண்டியதாகி விட்டது.
சென்னை, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள ரசிகர் மன்றத்தினர் இன்று காலை அவசர கூட்டம் போட்டு அஜீத்தின் கட்டளைப்படி நடப்பதாகவும், அவரது விருப்பத்துக்கு மாறாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இவ்வாறு நிர்வாகி கூறினார்.

Inscription à :
Articles (Atom)