vendredi 24 décembre 2010

காவலனைக் கைப்பற்றும் ஜெயா தொலைக்காட்சி


அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு என்னென்னவோ மாற்றங்கள் நடந்து வருகிறது.  விஜய் இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டார் என்று சொன்னார் அவரது தந்தை. அது உண்மைதான்! ஆனால் காவலன் படத்தை ஜெயா தொலைக்காட்சிக்கு விற்பதன் மூலம் விஜய் ரசிகர்களின் வாக்குகளில் ஒரு குறிபிட்ட சதவிகிதத்தை அதிமுகவுக்கு ஆதரவாகத் திசை திருப்ப முடியும் என்று வியூகம் வகுத்திருக்கிறார்களாம்.
 
இந்த அடிப்படையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கே. முரளிதரன் தயாரிப்பில் வெளிவந்த ஆட்ட நாயகன் படத்தை ஜெயா டி.வி வாங்கியிருப்பதால் இதை முக்கியமான விஷயமாக கவனிக்கிறது திரையுலகமும், அரசியல் அரங்கமும்.

இடையில் படங்கள்  வாங்குவதை முற்றாக நிறுத்தி வைத்திருந்த ஜெயா, ஆட்ட நாயகன் படத்தை வாங்கியதன் மூலம் தனது அரசியல் ஆட்டத்தைப் புத்திசாலித்தனமாக ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள். ஜெயா டி.வியின் மாற்றங்களில் மிக முக்கியமான மற்றொன்று ஜாக்பாட் நிகழ்ச்சியில் நதியாவை நீக்கிவிட்டு,  நமீதாவை ஒப்பந்தம் செய்திருப்பது!  இதற்காக பல மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் நமீதா, கோடியில் சம்பளம் பேசினாராம். நமீதாவை இனி அம்மா புகழ்பாடும் மச்சினியாக மாற்ற வேண்டும் என்பது ஜெயா டிவியின் கணக்கு. இன்று ஊடகம் இல்லாவிட்டால் அரசியல் இல்லை என்பதையே இந்த விளையாட்டுக்கள் காட்டுகின்றன.

இந்த சூடான ஆட்டம் ஒருபுறம் இருக்க வனிதா விஜகுமார் விவகாரத்தைக் கிழி கிழி என்று கிழித்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எதிராக நடிகர் சங்கம் தெரிவித்த புகாரின் அடிப்படையில் திரையுலக விழாக்களில் கலந்துகொள்ள இந்த டி.விக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதே காரியத்தை இதற்கு முன்பு செய்த டி.விக்களின் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையே!

மாமியார் உடைத்தால்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...