பொங்கல் தினத்திலாவது வெளி வருமா அல்லது வராதா என்ற கேள்விகளை கிளப்பிக் கொண்டிருக்கும் காவலனுக்கு தெளிவான விடை தெரிந்துவிட்டது. வராது! பதினேழு கோடி ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் கொடுத்துவிட்டு இப்படத்தை வாங்க முற்பட்ட ஷக்தி சிதம்பரம், இந்த அட்வான்சை புரட்டவே அங்கங்கே கடன் வாங்கியிருந்தாராம். இவர் முன்பே தனது படங்களுக்காக வாங்கிய கடன்களும் இப்போது சேர்ந்து கொண்டது.
என்னால முடியாது. ரிலீஸ் பண்ண முடிஞ்சா பண்ணிக்கோங்க என்று என்று கூறிவிட்டாராம் இவர். தயாரிப்பாளர் ரொமேஷ் பாபுவும் இந்த படத்தின் லாபத்தை இடமாக முதலீடு செய்துவிட்டாராம். ஆனால் காவலன் மீண்டும் ஷக்தி சிதம்பத்திடமிருந்து இவர் கைக்கு போய்விட்டது. பணத்தை கையிலிருந்து ரொமேஷ் இறக்கினால்தான் படம் வெளியாகும்.

ஆனால் அதுவும் சாத்தியமில்லை என்கிறார்கள். நாமே பதினைந்து கோடியை ஏற்பாடு செய்து படத்தை வெளியிடலாம் என்று நினைத்த விஜய்யை எஸ்.ஏ.சி அடக்கி வைத்ததுடன் படம் எப்போ வருதோ, வரட்டும். டென்ஷனே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் மகனிடம்.
பொங்கல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு எல்லா பிரச்சனைகளையும் உட்கார்ந்து பேசி முடித்து, பிறகு கொண்டு வருவார்கள் படத்தை. ஆனால் அந்த நேரத்தில் வரப்போகிற மற்ற சின்ன படங்களுக்கு சிக்கல் கொடுப்பான் காவலன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire