samedi 29 janvier 2011

தெலுங்கு பிசினசில் பாதி வேணும், தமிழுக்கு எட்டு கோடி சம்பளம்... -ஷங்கர் படத்திற்கு சூர்யாவின் நிபந்தனை?


எல்லாருடைய கைகளிலும் ஆயுள் ரேகை, புத்தி ரேகைதான் ஓடும். ஆனால்Suryaசூர்யாவோட உள்ளங் கையில் பூமத்திய ரேகையே ஓடிக் கொண்டிருக்கிறது என்று பெருமூச்சு விடுகிறது கோடம்பாக்கம்! அந்தளவுக்கு டாப் ரேஞ்சில் இருக்கிறது அவரது ஆசையும் லட்சியமும்! அதற்கேற்றார் போலதான் கேட்கிறாராம் தனது சம்பளத்தையும்.
அதன் விளைவாக எழும் வதந்திகள் கொஞ்ச நஞ்சமல்ல. உச்சக்கட்ட வதந்தி இதுதான். ஷங்கர் இயக்கவிருக்கும் மூவர் படத்திலிருந்து (த்ரி இடியட்சின் தமிழ்ப் பெயர்) முதலில் விலகிக் கொண்ட விஜய்யே மீண்டும் அந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார். இந்த வதந்தியை உண்மையாக்கி விடுவார் போலிருக்கிறது சூர்யா.
தமிழில் நடிக்க எட்டு கோடி சம்பளமும், தெலுங்கில் நடிக்க அந்த ஏரியா வியாபாரத்தில் ஐம்பது சதவீத லாபத்தையும் சம்பளமாக கேட்கிறாராம். ஷங்கருக்கு தெலுங்கிலும் பெரிய மார்க்கெட் இருக்கிறது. அதைப்போல சூர்யாவுக்கும் இருக்கிறது. இவ்விருவரும் இணையும் படம் என்றால் குறைந்தது இருபது கோடிக்காவது வியாபாரம் ஆகும் என்கிறார்கள். அப்படியென்றால் தமிழில் சூர்யா கேட்கும் எட்டு கோடி சம்பளத்தை விட, தெலுங்கில் கிடைப்பது பத்து கோடியல்லவா? இதனால் ஆடிப்போயிருக்கிறதாம் ஜெமினி நிறுவனம்.
பேசாமல் விஜய்யிடமே பேசிப் பார்க்கலாம் என்கிற அளவுக்கு போய்விட்டது நிலைமை. இதற்கிடையில் இந்த சூர்யா நடிக்கிறாரோ இல்லையோ, இன்னொரு சூர்யா நடிக்கவிருக்கிறாராம் மூவரில். அவர் தமிழில் மார்க்கெட்டை தொலைத்துவிட்டு நிற்கும் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா! ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரை தவிர மேலும் ஒரு கேரக்டர் உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறது. அதில் நடிக்கதான் எஸ்.ஜே.சூர்யா அழைக்கப்பட்டிருக்கிறாராம்.
ஹ்ம்ம்ம்... இன்னும் எத்தனை முடிச்சுதான் போடப் போறாங்கன்னு பார்க்கலாம்!

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...