vendredi 28 janvier 2011

விஜய்யின் அரசியல் டென்ஷனை தனிஆளாய் குறைத்த அசின்.

அசினை இன்னமும் ஸ்லிம், இன்னமும் ஸ்லீக் ஆக்கி அனுப்பி இருக்கிறது மும்பை. முன்னைப்போல உரிமையாக 'ஹாய் மலபார்!’ என்று அழைக்கலாமா என யோசிக்கும்போதே, ''இப்போதான் சொந்த வீட்ல இருக்குற மாதிரி இருக்கு. நம்ம ஊர்... நம்ம ஊர்தான்!'' என்று கூந்தலை ஒதுக்கும் கரத்தில், செம ஸ்டைலான ஸ்பிரிங் தங்க வளையல்!

''விஜய்யோடு இது எனக்கு ஹாட்ரிக் ஹிட். 'காவலன்’ ரிலீஸுக்கு அடுத்தடுத்து ஏதேதோ நெருக்கடிகள் வந்தப்போ... மனசுக்குக் கஷ்டமா இருந்தது. ஆனா, இப்போ படம் எல்லா சென்டர்லயும் ஹிட்னு கேள்விப்பட்டதும்,  ரொம்ப சந்தோஷம். எப்பவுமே உடனே கிடைச்சுட்டா அந்தச் சந்தோஷத்தின் மதிப்பு குறைவாகத் தெரியும். இப்போ டபுள் ஜாக்பாட் சந்தோஷம்!''     

''தன் சினிமா கேரியரில் 'காவலன்’ சமயத்தில்தான் விஜய் ரொம்ப டென்ஷனா இருந்திருப்பார். ஷூட்டிங்ல அவர்கிட்ட எதுவும் வித்தியாசம் உணர்ந்தீங்களா?'

''எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியலை. முன்னாடி பார்த்த அதே ஃப்ரெண்ட்லி விஜய்தான். 'காவலன்’ ஷூட்டிங் முழுக்க காரைக்குடியில்தான் நடந்தது. கேலி, கலாட்டா, கிண்டல்னு தினமும் ஏதாவது ஒரு என்டர்டெயின்மென்ட் இருந்துட்டே இருக்கும். நான் ஒருநாள் மொத்த டீமுக்கும் 'பூ பார்ட்டி’ கொடுத்தேன். அதாவது, அந்தப் பார்ட்டிக்கு எல்லாரும் ஏதாவது ஒரு பூவோடு வரணும். ஒவ்வொருத்தரும் வித்தியாசமான பூக்களோடு வந்து பார்ட்டியை கலர்ஃபுல் ஆக்கிட்டாங்க. எனக்குத்தான் பளிச்சுனு எந்தப் பூவும் சிக்கலை. உடனே, பக்கத்தில் இருந்த தாழம்பூவைப் பறிச்சேன். 'அந்தப் பூவில் பாம்பு இருக்கும்’னு தினேஷ் மாஸ்டர் பயமுறுத்தினார். நல்லவேளை பாம்பு எதுவும் வரலை. ஆனா, சும்மா விடுவேனா நான், மறு நாள் ஒரு ரப்பர் பாம்பை தினேஷ் மேல போட்டு 'பா... பா... பாம்பு’ன்னு ரஜினி மாதிரி பயமுறுத்திக் கலாய்ச்சுட்டேன். அப்பெல்லாம் விஜய் ரொம்ப ரிலாக்ஸாகத்தான் இருந்தார்!''

''விஜய் அரசியல்ல என்ட்ரி கொடுக்கப் போறார்னு சொல்றாங்க. அதைப்பத்தி உங்ககிட்ட எதுவும் சும்மா ஃப்ரெண்ட்லியா பேசினாரா?''

''விஜய் எனக்கு ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். ஆனா, அரசியல் பத்திலாம் அவர் இதுவரை என்கிட்ட பேசியதும் இல்லை. நானும் கேட்டது இல்லை. ஆனா, ஷாட் முடிஞ்சாலும்கூட தீவிர யோசனையிலேயே இருப்பார். அப்பெல்லாம் நாங்க பண்ற சேட்டைகள்தான் அவருக்குப் பெரிய ஆறுதலா இருக்கும்!''

''எப்படி இருக்கு பாலிவுட் வாழ்க்கை?''

''தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது 'இது நம்ம படம்’னு ஒரு நெருக்கமான ஃபீல் இருக்கும். அந்த ஃபீல் இந்திப் படங்களில் நடிக்கும்போது ஏனோ இருக்க மாட்டேங்குது. மும்பையில் நடிப்பதை ஒரு வேலையாகச் செய்கிறேன். அவ்வளவுதான். பாலிவுட்டில் எல்லாத்திலும் ஓர் அந்நியத்தன்மை இருக்கு. இதுக்கு மேல் வேறு வார்த்தைகளில் எனக்கு சொல்லத் தெரியலை!''

''ஒருவேளை உங்க கோலிவுட் நண்பர்களை மிஸ் பண்ணுவதால் அந்த வருத்தமா?''

''அப்படிச் சொல்ல முடியாதே! விஜய், சூர்யா, ஜோதிகாலாம் என் ஆல் டைம் ஃப்ரெண்ட்ஸ். அவங்ககூட எப்பவுமே டச்லதான் இருப்பேன். 'உள்ளம் கேட்குமே’ படத்துல என்கூட நடிச்ச ஜாமி (ஆர்யா), பூஜாலாம் இப்பவும் என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்லதான் இருக்காங்க. என் நண்பர்களின் பிறந்த நாளுக்கான முதல் வாழ்த்து எப்பவும் என்னுடையதுதான். 'ரெடி’ பட ஷூட்டிங்குக்காக கொழும்பு போய் இறங்கினப்போ, பூஜாவின் பிறந்த நாள். என்கிட்ட இருந்த அவங்க நம்பருக்கு கால் கனெக்ட் ஆகலை. உடனே லோக்கல்ல இருந்த பூஜா ஃப்ரெண்ட்கிட்ட நம்பர் வாங்கிப் பேசினேன். பூஜாவுக்குச் சந்தோஷம் தாங்கலை. உடனே, நான் தங்கி இருந்த ஹோட்டலுக்குக் கிளம்பி வந்துட்டாங்க. பர்த்டே பார்ட்டி செம தூள். ஃப்ரெண்ட்ஸை எப்பவும் நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன்!''

''ஷாரூக் கான் கூட நடிக்கப் போறீங்களாமே... சல்மான் - ஷாரூக் என்ன வித்தியாசம்?''
''சல்மான் எப்பவுமே கூல். ஷூட்டிங் பிரேக்ல ஒரு சேர் போட்டு அமைதியா உக்காந்து, சுத்தி நடக்கிறதைக் கவனிச்சுட்டு இருப்பார். 'முரட்டுக்காரர், கோபக்காரர்’னு அவரைப்பத்தி ஏக பில்ட்-அப் இருக்கு. ஆனா, அவரை அப்படி நான் பார்த்ததே இல்லை. ஷாரூக் கானைப் பத்திச் சொல்ற அளவுக்கு அவருடன் எனக்கு அறிமுகம் இல்லை. இப்பத்தான் அவர்கூட ஒரு படத்தில் நடிக்க, பேசிட்டு இருக்காங்க. பார்க்கலாம்!''

''கடைசியா என்ன தமிழ்ப் படம் பார்த்தீங்க?''

'' 'எந்திரன்’! மேட்டுப்பாளையத்தில் ஷூட்டிங்ல இருந்த சமயம் 'எந்திரன்’ ரிலீஸ் ஆச்சு. ஒட்டுமொத்த 'காவலன்’ டீமும் முதல் நாளே படத்தைப் பார்த்துட்டோம். ரஜினி சார் கலக்கிட்டார்ல!''

''அசினுக்கு எப்போ கல்யாணம்?''

''நான் ரொம்பச் சின்னப் பொண்ணுப்பா!''

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...