தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய் காவலனின் வரவேற்பால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். காவலன் வெற்றியும், ஷங்கர் 3 இடியட்ஸில் அவருக்கான சீட்டை கன்பார்ம் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். எது எப்படியோ அவரது ரசிகர்களின் பிபி மேலும் ஏற்றப்போகும் செய்தி இது. ஆம்..
எல்லா மொழிகளிலும் பல ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது நடந்து வருகிறது ஆனால் தமிழில் மட்டுமே அது கை கூடாத நிலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் என்பதால் இவர்கள் சேர்ந்து நடிப்பதே இல்லை. ஒரு காலத்தில் அஜித் தும் விஜய்யும் சேர்ந்து நடித்தார்கள், ஆனால் இன்று அது சாத்தியமே இல்லை என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்ல துவக்கத்தைத் தந்தவர் அஜித். மங்காத்தா மூலம் மல்ட்டி ஸ்டார் படம் என்ற பேருடனேயே ஆரம்பிக்கப்பட்ட படம். அதில் நடிகர் இன்று வரை சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதை தொடர்ந்து..
மனிரத்னம் இயக்கும் இன்னும் ஒரு மல்ட்டி ஸ்டார் படம் வரப்போகிறது இதற்கான தீவிரமாக திரைக்கதை உருவாக்கத்தில் இருக்கிறார் மனிரத்னம். இந்தப்படத்தில், விஜய், விக்ரம், மற்றும் விஷால் நடிக்க இருப்பதாக செய்திகள் வட்டாரம் சொல்கிறது. மற்ற அனைத்து டெக்னிக்கல், நடிகர்களுக்கான தேர்வும் நடந்து வருவதாக சொல்கிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire