அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்க்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் குதிக்கிறது. விஜய் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. கூட்டணியில் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இருந்து 3 தொகுதிகள் விஜய் இயக்கத்துக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா “சீட்” ஒதுக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
இது போன்று முக்கிய நகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்கள் இப்போது அ.தி.மு.க.க்கு ஆதரவாக தேர்தல் வேலைகள் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா, விஜய் படங்களுடன் போஸ்டர் அச்சிட்டு ஒட்டி வருகின்றனர்.

Tags : Vijay ,Vijay In Politics

Aucun commentaire:
Enregistrer un commentaire