mercredi 16 mars 2011

விக்ரம் வேடத்தில்தான் ஆர்யா போரை விஞ்சிய அக்கப்போர்!


ஒரு படத்தை தயாரிப்பதற்கு முன் எந்தெந்த விஷயத்திற்கோ நேரத்தையும் பணத்தையும் செலவிடும் படக்குழுவினர் டைட்டில் விஷயத்தில் மட்டும் அலட்சியம் காட்டுவார்கள். விளைவு? படத்தையே முடித்த பின்பும் பெயர் வைக்க முடியாத குழப்பத்தில்தான் கொண்டு போய் விடும்.
விக்ரம் படத்திற்கும் அதே சோதனைதான். பிதா என்ற இந்த தலைப்பை ஏற்கனவே வேறொரு தயாரிப்பாளர் பதிவு செய்து வைத்திருக்கிறார். தெய்வமகனும் கிடைக்காமல் பிதாவும் கிடைக்காமல் படத்தையே முடித்துவிட்டார் விஜய். ஆனாலும் அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதத்தில் யூனிட்டில் உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி விருந்து வைத்தாராம்.
இந்த படத்தின் ஷ§ட்டிங் நேரத்தில்தான், மணிரத்னம் அழைக்கிறார் என்று மும்பைக்கே ஓடினார் விக்ரம். படப்பிடிப்பிலிருந்த டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் மோகன் நடராஜன் ஆகியோர் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். நமது படத்தின் ஷ§ட்டிங்கை விட்டுட்டு மணிரத்னம் கூப்பிடுறாருன்னு போகணுமா என்று முணுமுணுத்தார்கள். அப்படியெல்லாம் விக்ரம் மற்றவர்களை அழ வைத்துவிட்டு ஓடிப் போய் மணிரத்னத்தை பார்த்தது பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காகதான். இப்போது அந்த படத்திலேயே இல்லை விக்ரம். ஏன்?
விஜய், மகேஷ்பாபு இருவருக்கும் போக எனக்கு என்ன ரோல் என்றாராம் விக்ரம். அதற்கு வேறு என்னென்னவோ பதில் சொல்லி சமாளித்தாராம் மணி. அதனால்தான் பொன்னியின் செல்வனில் இருந்து விலகிக் கொண்டார் சீயான்.
நாற்காலி காலியாகட்டும் என்று காத்திருந்த ஆர்யா, தானே சென்று மணிரத்னத்தை சந்தித்துதான் விக்ரமுக்காக வைத்திருந்த ரோலை கைப்பற்றினாராம். பொன்னியின் செல்வனில் போர் இருக்கலாம் தப்பில்லை. அதற்காக இப்படி அக்கப்போர் இருக்கணுமா?



Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...