mardi 8 mars 2011

வாய்ஸ் கொடுப்பாரா விஜய் ?




கோடம்பாக்கத்தில் பெரிய நடிகர்கள் பேட்டி வேண்டும் என்றால் அவர்கள் வழியிலேயே போய் பேட்டியைக் கறந்தாக வேண்டும். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் கண்டித்து நாகப்பட்டினத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்தில் விஜயின் பேச்சு, ரொம்பவே ரெடிமேடாக இருந்தது. உண்மையில் விஜய் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து பேசினாரா, இல்லை அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் எழுதிக்கொடுத்துப் பேசினாரா என்பதை அவரிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து விஜய் பேட்டிக்காக முயற்சித்தோம்.
<span>விஜய் பேட்டி வேண்டுமென்றால் முதலில் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் அனுமதி பெற வேண்டும். அவர் விஜயிடம் பேசி தேதியும் நேரத்தையும் சொல்வார். ஒருவழியாக நீங்கள் விஜய் அப்பயிண்மெண்டை ங்கிவிட்டால் விஜய் சார்பாக முதலில் அவரது தந்தைதான் பேட்டியின் நோக்கம் பற்றிப் பேச வேண்டும். ஒரு வழியாக விஜயை சந்திக்கும்போது தனக்கு அறிமுகமான நிருபர் என்றால் “வாங்கணா” என்று சற்றுக் கலகலப்பாகப் பேசுவார். புதிய நிருபர் வந்திருந்தால், “சொல்லுங்க சார் ” என்பதோடு, கேள்விகளுக்கு ஒரு வரியில் மட்டும் பதில் வரும். சிரிப்பிலும்  சிக்கனம் இருக்கும்.விஜயிடம் ஒரு வரி பதில்களையாவது பெற்றுவிடலாம் என்று முயற்சித்தபோது, விஜய் அப்பா தெளிவாகச் சொன்னார். “இப்போ பேசினால் அரசியலாயிடும். தேர்தல் முடியட்டும். அதுக்கு முன்னாடி பிரஸ்ஸ சந்திக்கிற மாதிரி இருந்தா கட்டாயம் கூப்பிடுவோம். இப்போதைக்கு நாகப்பட்டினம் மீட்டிங் பத்தி எழுதுங்க. நம்ம பி.ஆர்.ஓகிட்ட நாகப்படினம் மீட்டிங் வீடியோ சிடி வாங்கி வெப்சைட்ல போடுங்க. அதுவே உங்களுக்கு பெரிய மெட்டீரியல்தானே?” என்றார்.நமக்குக் கிடைத்த தகவல்படி இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் ஸ்டேட்மெண்ட் எதுவும் விடப்போவதில்லையாம். மாறாக, வேலாயுதம் பாடல் படப்பிடிப்புக்காக மலேசியா செல்ல இருக்கிறாராம்.

Tags Vijay


Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...