அசின் படத்தை இலங்கையில் திரையிட சிங்கள அரசு அனுமதி அளித்துள்ளது.விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் நடிகர்களை இலங்கை அரசு பட்டியலிட்டு வைத்துள்ளது. அவர்கள் படங்களை இலங்கையில் திரையிட அனுமதி அளிப்பது இல்லை.
அந்த வகையில் விஜய் படத்துக்கும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாகையில் இலங்கை அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கடுமையாக கண்டித்தார்.மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் இங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் இலங்கை காணாமல் போய் விடும் எனறும் ஆவேசமாக பேசினார். இந்த பேச்சுக்கள் சிங்களர்களை ஆத்திரமூட்டியது. விஜய் படங்களை இலங்கையில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று எதிர்த்தனர்.
இந்த நிலையில் விஜய், அசின் ஜோடியாக நடித்த “காவலன்” படம் இலங்கையில் திரையிட அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர்.
இறுதியில் அசின் இப்படத்தில் நடித்து இருப்பதால் அவருக்காக படத்தை இலங்கையில் திரையிட அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகினர் தடையை மீறி சில மாதங்களுக்கு முன் அசின் இலங்கை சென்றார். அங்கு நடந்த இந்தி படப்பிடிப்பில் பங்கேற்றார்.
பிற நடிகர்கள் இலங்கை பயணத்தை தவிர்த்த நிலையில் அசின் துணிச்சலாக வந்தது சிங்கள அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு விசேஷ வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. அவருக்காகவே “காவலன்” படத்தை திரையிட சம்மதித்து உள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire