samedi 5 mars 2011

பழைய பாணிக்கு திரும்பி விட்டேன்

‘சட்டப்படி குற்றம்’ படத்தை இயக்கி தயாரித்து வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். சத்யராஜ், விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு நடந்து வருகிறது. படம் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:  சமூகத்தின் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோபத்தை ஒருங்கிணைத்து, அவர்களை தவறுகளுக்கு எதிராக போராட வைத்து, பிரச்னைகளுக்கு தீர்வும் சொல்லும் படம். இளைஞர்களை வழிநடத்தும் கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார். மதவாதி, அரசியல்வாதி, அதிகாரிகளால் பாதிக்கப்படும் இளைஞர்கள், அதை எப்படி எதிர்த்து நிற்கிறார்கள் என்பது திரைக்கதை. 75 சதவிகிதம் அடர்ந்த காட்டுக்குள் படமாக்கப்பட்டுள்ளது. அரசியலையும், சட்டத்தையும் வைத்து விளையாடும் திரைக்கதை கொண்டதாக எனது ஆரம்பகால படங்கள் இருந்தது. அவைதான் எனக்கு புகழை பெற்றுத் தந்தன. பிறகு காதல், கிராமம் என்று பயணத்தை மாற்றினேன். இப்போது திரும்பவும் பழைய பாணிக்கு திரும்பியிருக்கிறேன். இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது.



Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...