டெல்லி அருகே உள்ள டெக்ராடன்னில் நடைபெற்று வந்த நண்பன் படபிடிப்பை ஒருநாள் நிறுத்திவிட்டு, சட்டப்படி குற்றம் படத்தின் இசையை வெளியிடுவதற்காகச் சென்னை வந்திருந்தார் இயக்குனர் ஷங்கர். விழாவில் ஷங்கரின் பேச்சு சுருக்கமாக இருந்தாலும் ஹைலைட்டாக இருந்தது.
“நீதிக்குத் தண்டனை படத்தில்தான் நான் எஸ்.ஏ.சி சாரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். எனக்கு 22 வயது. அப்போது நான் மிகப் பெரிய சோம்பேறி. இயக்குனர் கொஞ்சம் அகன்றுவிட்டால் நான் ரிலாக்ஸ் ஆகிவிடுவேன். அவர் எடிட்டிங் கிளம்பிவிட்டால் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவேன். ஒருநாள் எஸ்.ஏ.சி சார் என்னைப் பார்த்து, ‘இந்த வயதில் நீ உழைக்காவிட்டால் வேறு எந்த வயதிலும் நீ உழைக்க முடியாது’ என்று சொன்னார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அன்றுமுதல் நான் உழைக்க ஆரம்பித்தேன். அவரிடமிருந்து விறுவிறுப்பாகத் திரைக்கதை அமைக்கக் கற்றுக்கொண்டேன். அவரிடமிருந்து நேரம் தவறாமையை, கடின உழைப்பை, கற்றுக்கொண்டேன். அப்பாவைப் போலவே நெருப்பாக இருக்கிறார் விஜய். அவரைப் போலவே நேரம் தவறாமையும் அர்பணிப்பும் விஜயிடம் இருப்பதை நண்பன் படப்பிடிப்பில் பார்க்கிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் சத்தியராஜும் சளைத்தவர் அல்ல. அவரும் விஜயுடன் போட்டி போடுகிறார். யார் படப்பிடிப்புக்கு சிக்கரம் வருவது என்பதுதான் அந்தப் போட்டி. சேவல்கொடி செந்தில் என்ற இரண்டு வார்த்தைகள் கொண்ட டயலாக்கை சத்தியராஜ் சாரிடம் சொன்னால், அதைப் பேசுவதற்கு ஷாட் வைக்கும் வரை தூரமாக நின்று பயிற்சி எடுத்துகொண்டே இருப்பார். அவரது காதாபாத்திரம் பேசப்படும்” என்றார்.
சத்தியராஜ் பேச வந்தபோது “ எஸ்.ஏ.சி அநியாயத்துக்குத் தன் ஸ்டூடண்ட் ஷங்கரைக் கெடுத்து வைத்திருக்கிறார். காலையில் ஏழரை மணிக்கு பிரேக் ஃபாஸ்ட் என்றால் அதற்கு முன்பு முதல் ஷாட்டை எடுத்துவிடுகிறார்” என்றார். நண்பனில் சேவல்கொடி செந்தில் என்பதுதான் சத்தியராஜ் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயராம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire