3 இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்கிறார் என்பதற்காக ஜீவாவிடம் இடியட் மாதிரி கேள்விகள் கேட்டால் தொலைந்தது என்பதற்கு சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு உதாரணம். நண்பன் பட சூட்டிங் ஸ்பாட்டுக்கு அழையா விருந்தாளியாகப் போயிருக்கிறார் ஒரு முன்னணி வார இதழின் நிருபர் நடிகர். விஜயிடம் பேட்டி என்று போய் நின்னவருக்கு “ சாரி பாஸ் ஷங்கர் சார்கிட்ட ஃபர்மிஷன் வாங்கிட்டு வாங்க.” என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டாராம். சரி குன்னூர்வரை வந்துட்டு கம்முன்னு போகமுடியாதே என்று ஜீவாவிடமாவது ஒரு பேட்டியை பிடித்துக்கொண்டு போவோம் என்று அவரை மடக்கியிருக்கிறார். சீனியர் நிருபராச்சே ஒதுங்கிப் போறது உடம்புக்கு அகாதுண்ணு ஜீவாவும் “ வாங்கண்ணே சாப்பிட்டுகிட்டே பேசுவோம் என்று காரா வேனில் கணஜோரான மரியாதையோடு பேட்டிக்கு தயாராகியிருக்கிறார். அவரிடம் கோ படத்தில் உங்களுக்கு முன்னால் சிம்புதான் நடிக்கறதா இருந்தது. இப்போது அவரை நீக்கிட்டு உங்களை போட்டிருக்காங்க. சிம்பு இடத்தில் நீங்க இருக்கீங்க. இப்போ எப்படி ஃபீல் பண்ணுறீங்க என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்வியால் பிபி எகிறிய ஜீவா கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு “என்னண்ணே?! ஏதோ கமல் சார் விட்டுக் கொடுத்த கேரக்டர் எனக்கு கிடைச்ச மாதிரி கேட்கிறீங்க. சிம்புவும் என் லெவலுக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டு தானே? நானாவது நாலு ஹிட்டு கொடுத்திருக்கேன்.
அவரு மன்மதன், அப்புறம் விண்ணை தாண்டி வருவாயா இந்த ரேண்டே ஹிட்டுதான் இதுவரைக்கும். இதுல மன்மதன் தயாரிப்பாளர் எவ்வளவு பெரிய கடனாளி ஆனார்னும் உங்களுக்கும் தெரியுமே” என்று சொல்ல பேட்டி சரியான லூட்டி ஆகிவிட்டதாம். நண்பன் நினைச்சு பேட்டிக்குப் போனேன் ஒரே துன்பமாப் போச்சு என்று புலம்புகிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire