டைரக்டர் மணிரத்னம் இயக்க இருக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராவணன் படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் இயக்க இருக்கும் படம் "பொன்னியின் செல்வன்". கல்கியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கும் இப்படத்தை சுமார் ரூ.200கோடியில் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கிறார் மணி. படத்தில் ஏற்கனவே விஜய், ஆர்யா, தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு, நடிகை அனுஷ்கா ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்டது. இதனிடையே படத்தில் மற்றொரு நடிகையாக பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக டைரக்டர் மணிரத்னம், ப்ரியங்காவிடம் இரண்டு முறை அணுகி இருந்தார். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இப்போது ப்ரியங்காவே தானாக முன்வந்து மணிரத்னம் படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக கூறியிருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் மணிரத்னத்தை சந்தித்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது குறித்து பேச இருக்கிறார். படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
Tags : Vijay, Ponniyin Selvan ,Veerudu


Aucun commentaire:
Enregistrer un commentaire