தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது. அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை.
அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போதாதென்று மக்கள் கடுமையான விலைவாசியால் அவதிப்படுகிறார்கள். நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அதிரடியாக பேட்டியும் அளித்து பரபரப்பூட்டினார்.
இந்த நிலையில், அன்று மாலையே கலைஞருடன் பொன்னர் சங்கர் படம் பார்க்க வேண்டிய சூழல். காலையில் ஏற்பட்ட பரபரப்பினால் ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள். இந்த சிறப்புக் காட்சியில் சத்தியராஜ், பிரபு, பாக்கியராஜ், நெப்போலியன் ஆகிய பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ரஜினியிடம் கேட்க வேண்டிய கேள்வியை சிரித்துக்கொண்டே வைரமுத்துவிடம் கேட்டாராம் கலைஞர். அருகில் இருந்த ரஜினி சிரித்து சமாளித்திருக்கிறார்.
படம் முடிந்ததும் கலாநிதி மாறனிடம் நலம் விசாரித்து, சகஜமாக எல்லோரிடமும் பேசாமல் மௌனம் காத்தார். கலைஞரிடம் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சரசரவென வெளியே வந்து காரில் ஏறிப் பறந்தாராம் ரஜினி.
இன்னொரு விஷயம்... தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் தான் கமல் கலைஞரோடு பொன்னர் சங்கர் படம் பார்த்தார். அப்போது கலைஞர் டி.வி. நிருபர் படத்தைப் பற்றி கேட்கும் போது, படம் நன்றாக இருக்கிறது. ஒரு அண்ணனாக பிரஷாந்தை பாராட்ட கடமைப் பட்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, நான் ஒரு கலைஞனாக தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்கு இருப்பது கலைத் தொடர்பு மட்டும் தான். வேற எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக பதில் அளித்திருக்கிறார்.
ரஜினி வாக்களித்ததை படம் பிடித்துவிட்ட கேமராக்கள் கமலுக்கும் குறிவைத்தது. இதை நன்றாக புரிந்து கொண்ட கமல். வீடியோ கேமராக்கள் வெளியே சென்றால் தான் நான் ஓட்டுப் போடுவேன் என்று கை கட்டி நின்றுவிட்டார். பின்னர் அவர், நான் ஓட்டுப் போடுவது மாதிரி நடிக்கிறேன், அதை எடுத்துவிட்டு செல்லுங்கள் என்று சொன்னார். வீடியோ கேமராக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் தான் கமல் ஓட்டுப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அன்று காலை ரஜினியும் கமலும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்... மாலை ரொம்பவும் கூலாக ஓட்டுப்போட வந்தார் விஜய். பாத்திரம் வைத்து பிடிக்கிற அளவுக்கு புன்னகை வழிந்தது விஜய்யின் முகத்தில். தன் அப்பா, மனைவியுடன் ஓட்டுப்போட வந்த விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார்.
பொதுவாகவே போட்டோகிராபர்கள் விஜய் சார்... விஜய் சார்... என எத்தனை முறை காட்டுக் கத்து கத்தினாலும் விஜய்யின் முகத்தின் புன்னகை வருவது அரிதான ஒன்று. அப்படிப்பட்டவர் சிரித்துக் கொண்டே இருந்ததை வியப்பாகவே பார்த்தார்கள் பத்திரிக்கையாளர்கள்.இதற்கு மிக முக்கிய கரரணம் மக்களும் விஜய் ரசிகர்கள் என தெரிகிறது.காரணம் இந்த ஆண்டு கிட்டதட்ட 75 % 80 % வக்களித்திருக்கிரர்களம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire