mardi 10 mai 2011

பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது ஏன்...? பரபரப்பு தகவல்கள்

பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (ஜெயமோகனின் 7வது உலகம் தான் பாலாவின் நான் கடவுள் படம்) பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக் கொண்டு, ஞாபகங்கள் கொண்ட கதையை, சில கற்பனை பாத்திரங்கள் சேர்த்து 3 மணி நேர கதையாக்கும் வகையில் வசனங்கள் எழுதி முடித்திருந்தார்.

இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடி‌கரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை ப‌யன்படுத்தலாம்)

இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம். 




Tags Vijay, Ponniyin Selvan , Veerudu

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...