mercredi 24 novembre 2010

3 இடியட்ஸ்-மறுபடியும் நாயகி வேட்டையில் இறங்கிய ஷங்கர்!

டிசம்பர் 5-ம் தேதி 3 இடியட்ஸ் ரீமேக் சென்னையில் தொடங்கி 7-ம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தாயாரிப்பு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தற்போது இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் இருந்து ஒரு பிரத்தியேகத் தகவல் வந்திருக்கிறது. 3 இடியட்ஸ் படத்தின் இந்தி பதிப்பில் கரீனா கபூர் மட்டுமே கதாநாயகி. ஆனால் தமிழ், மற்றும் தெலுங்கு பதிப்புக்கு இரண்டாவதாக ஒரு கதாநாயகியை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்த ஷங்கர், அதற்காக ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஷங்கர் இந்த முடிவுக்கு வந்திருப்பதற்குக் காரணம், 3 இடியட்ஸ் இந்திப் பதிப்பை தமிழ், தெலுங்கு ஆடியன்ஸின் 25% பேர் ஏற்கனவே பார்த்து விட்டதால் அவர்களுக்கு படம் புதிதாக இருக்க வேண்டுமாம். அதேபோல ஓவர்சீஸ் ஆடியன்ஸுக்கும் புதிதாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தே இரண்டாவது கதாநாயகியை நுழைத்திருக்கிறாராம் ஷங்கர். தற்போது இரண்டாவது கதாநாயகிக்கான ஸ்கிரீன் டெஸ்ட்டும் ஷங்கர் அலுவலகத்தில் நடந்து வருவதாகத்தெறிகிறது.
தெலுங்கில் “3 ராஸ்கல்ஸ்” என்ற பெயரும், தமிழில் “நண்பன்”, “கில்லாடி”, “மூவர்” என்ற தலைப்புகளும் தற்போதைக்கு பரிசீலனையில் இருப்பதாகவும் ஷங்கர் அலுவலகத்திலிருந்து தகவல் கிடைக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...