jeudi 25 novembre 2010

மூவராகுமா 3 இடியட்ஸ்?!


162 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில், பெரிய பெரிய நட்சத்திரங்களை இயக்கிய ஷங்கர் '3 இடியட்ஸ்' போன்ற ரீமேக் படங்களை இயக்குவது சரியல்ல, '3 இடியட்ஸ்' தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றதல்ல என்பது பரவலான கருத்தாகும். ஆனால் எதையும் பிறர் ரசிக்கும்படி, சிறப்பாகச் செய்யும் ஷங்கர், '3 இடியட்ஸின்' கதையை மாற்றியிருக்கிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் '3 இடியட்ஸ்' இந்திப் பதிப்பை பார்த்திருப்பார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு, கதையினை மாற்றியுள்ளாராம். கதை மாற்றத்தின் ஒரு பகுதியாக இலியானாவிற்கு போட்டியாக இரண்டாவது நாயகியை கதையில் ஷங்கர் அறிமுகப்படுத்தியுள்ளாராம். ஸ்ரீகாந்த் அல்லது ஜீவாவிற்கு ஜோடியாக அந்த இரண்டாவது நாயகி இருப்பார் எனத் தெரிகிறது. இவ்வாறாக கதையில் பல மாற்றங்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு '3 இடியட்ஸை' ஷங்கர் இயக்கவுள்ளார். மாதவன், சிம்பு, ஆர்யா, சித்தார்த் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இருந்து விலகிவிட்ட நிலையிலும் இருப்பவர்களை வைத்து இப்படத்தை சிறப்பாக எடுக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார். இப்படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கு '3 ராஸ்கல்ஸ்' என பெயர் வைத்த ஷங்கர், தமிழ்ப் பதிப்பிற்கு வரிவிலக்கினை பெற்று தரும் வகையில் தலைப்பைத் தீவிரமாக தேடி வந்தார். இந்நிலையில் தமிழ்ப் பதிப்பு 'மூவர்' என்ற தலைப்புடன் வெளிவரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ம்ஹ்ம்ம்.. தந்தூரியில செட்டிநாடு மசாலாவ தடவ போறீங்க... காரம் கொஞ்சம் தூக்கலா இருந்தா சரி....!!

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...