jeudi 25 novembre 2010

வழிக்கு வந்த இலியானா - விஜய் குஷி

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் இலியானா முதலில் 'கேடி' என்ற தமிழ் படத்தில் தான் திரை உலகில் அறிமுகமானார். அந்தப் படம் படு தோல்வி அடைந்ததால் அதன் பிறகு தமிழில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இவரை எப்படியாவது தமிழில் நடிக்க வைக்க வேண்டும் என்று பெரிய நடிகர்கள் பலரும் போட்டி போட்டு வந்தனர். தன் போக்கிரி படத்தில் எப்படியாவது இலியானாவோடு டூயட் பாட வேண்டும் என்று விஜய் குட்டிக் கர்ணம் போட்டும் அது முடியாமல் போனது.

அடுத்து விக்ரம் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு அதுவும் நடக்காமல் போனது. ஆனால் இப்போது ஷங்கர் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் திரி இடியட்ஸ் படத்தின் ரீமேக்கில் இலியானாதான் ஹீரோயின். தமிழில் பல வாய்ப்புகள் வந்தும் அதை நான் மறுத்துவிட்டேன், ஆனால் இது ஷங்கர் படம் என்பதால் அதை என்னால் மறுக்க முடியவில்லை என்று ஜாலியாக சிரிக்கிறார் இலியானா. படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகுவதால் இரண்டிலும் இலியானா தான் ஹீரோயின்

இலியானா ஜாலியாக இருக்கிறாரோ இல்லையோ, விஜய்க்கு செம ஜாலி. போக்கிரியில் விட்ட இலியானாவை இதில் பிடித்திருக்கிறார். ஒரு வழியாய் இலியானா தன் வழிக்கு வந்ததில் விஜய்க்கு குஷி! 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...