dimanche 21 novembre 2010

விஜய் ஸ்டைலில் மற்றொரு ஹீரோ


விஜய்யிடமும் அவரது தந்தை எஸ்.ஏ.சியிடமும் மேனேஜராக இருந்தவர் ஜெ.பி. என்கிற ஜெயபிரகாஷ்.
பல வருட சினிமா அனுபவத்தில் ‘நானும் என் காதலும்’ படம் மூலம் தயாரிப்பாளர் புரமோஷனை அடைந்துள்ளார். எஸ்.ஏ.சியின் சீடரான ராம்கிக்கே இயக்குனர் வாய்ப்பை அளித்துள்ளார் ஜெ.பி. குருவின் மீதுள்ள மாறாத மரியாதையால் தனது பெயருக்கு முன்னால் எஸ்.ஏ.சி என்று சேர்த்துக்கொண்டுள்ளார் ராம்கி.படத்தின் நாயகனாக புதுமுகம் ஆனந்த், நாயகியாக ஸ்வேதா நடிக்கின்றனர். கவசம், ஆண்மை தவறேல் படங்களுக்கு இசையமைத்துள்ள மரியா மனோகர் இசையமைத்துள்ள படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.ஜெ.பி தயாரிக்கும் இன்னொரு படத்தில் நாயகனாக நடிக்கும் ஷக்தி விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, “இன்று மிகப்பெரிய இயக்குனர்களாக இருப்பவர்கள் எஸ்.ஏ.சி சாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள்தான். உதவி இயக்குனர்களாக இருந்து இயக்குனர் ஆனவர்கள் குருவிற்கு தகுந்த மரியாதை தரனும். அந்த வகையில் தனது பெயருக்கு முன்பாகவே குருவின் பெயரை போட்டிருக்கும் ராம்கி பாராட்டுக்குரியவர். தயாரிப்பாளரின் தனது பெயரை ஜெ.பி என்று சுருக்கிக்கொண்டுள்ளார். ஜெயிக்கிற புரொடியூசர் என்ற அர்த்தம் வருவதற்காகவேதான் அப்படி வைத்துள்ளார் என்று நினைக்கிறேன்” என்றார்.நாயகன் ஆனந்த் பேசியபோது, “நான் அடிப்படையில் தமிழன்தான். பல வருடங்களுக்கு முன்பே எனது குடும்பம் ஐதராபாத்திற்கு போய்விட்டதால் தமிழ் அவ்வளவாக வராது. கதாநாயகி ஸ்வேதாவிடம் தமிழ் கற்றுக்கொண்டேன். இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது ராம்கி சார் எஸ்.ஏ.சியின் அசிஸ்டெண்ட் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் யாரென்று கேட்டபோது விஜய்யின் தந்தை என்று சொன்னார். அவ்வளவுதான் நான் ஷாக்காகிட்டேன். ஏனென்றால் எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். அவரது ஸ்டைலைதான் ஃபாலோ பண்ணனும் என்று ஆசைப்பட்டேன். விஜய்யோட படங்களை பார்த்து அவர் மாதிரி நடிக்க கற்றுக்கொண்டேன். எனக்கென்று மார்க்கெட்டெல்லாம் இல்லை என்றாலும். ராம்கி சார் திறமையின் மேல் உள்ள நம்பிக்கையில் இந்த படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...