
"விஜய்க்கு காதலுக்கு மரியாதை மாதிரி, எனக்கு இந்த படம்" என்ற ஜெய் எல்லா ஹீரோக்கள் மாதிரியே ஜோடிப்பொருத்தம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். "கனிமொழியில் என்னோட ஜோடியா நடிச்சிருக்கிற பதம்சிக்கும் எனக்கும் காம்பினேஷன் ஷாட்டே மொத்தம் பத்து நாட்கள்தான் நடந்திச்சு. அதனால் அவருடன் அதிகமாக பழக முடியலை". (ஏக்கமா, வருத்தமா, சந்தோஷமான்னே தெரியலையே)
"ரொம்ப யதார்த்தமான கதை இது. லைவ் சவுண்ட் முறையில படமாக்கினோம். அதுவும் எனக்கு புதுசா இருந்திச்சு" என்றார் ஜெய். வெங்கட்பிரபுவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்கிற அளவுக்கு அவருடன் குளோஸ் ஆக இருக்கும் இவர், மங்காத்தாவில் நடிக்கிறார் என்றொரு செய்தி. ஆனாலும் "தெரியல. கூப்டாருன்னா போவேன்" என்றார். அர்ஜுனன் காதலி, ஏ.ஆர்.முருகதாசின் அசிஸ்டென்ட் சரவணன் இயக்குகிற புதுப்படம் என்று எதிர்கால படங்களை கணக்கு போட்டு வைத்திருக்கும் ஜெய், "லைஃப்ல செட்டில் ஆன பிறகுதான் லவ்வு கல்யாணமெல்லாம்" என்றார்.
கல்யாணம் எப்போ வேணும்னாலும் வரும். காதலி, நம்ம செட்டில் ஆனாதான் வருவா...!
Aucun commentaire:
Enregistrer un commentaire