jeudi 25 novembre 2010

ரசிகர்களுக்கு ரெடிமேட் ஆட்டோகிராஃப் !


தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் உதிரித் தொழிலாளர்கள். இவர்கள் தங்கள் அபிமான ஹீரோயின்களை நேரில் பார்த்துவிட்டால் தீர்ந்தது. வேலையை மறந்து ஹீரோயின்களை வேடிக்கை பார்ப்பதை வாண வேடிக்கை போல என்ஜாய் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். கடந்த ஒரு வாரமாகப் பொள்ளாச்சியில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி மற்றும் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் எம். ராஜா இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருக்கிறது. இந்த ஷெட்யூலில் ஹன்ஸிகா, ஜெனிலியா இருவருமே விஜயுடன் நடித்துவருகிறார்கள். விஜயைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடிக்கிறார்களோ இல்லையோ… பள்ளிக்கூடத்தை கட் அடித்து விட்டு யூனிஃபார்ம்களுடன் ஹன்ஸிகா, ஜெனிலியா இருவரையும் பார்க்க மொய்க்கிறார்களாம் மாணவர்கள்.

வரும் இளசுகள் அத்தனை பேருமே ஆட்டோகிராஃப் வாங்குவதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு முட்டி மோதுவாதால் படத்தின் புரடெக்‌ஷன் மேனேஜர் ஒரு ஐடியா செய்திருக்கிறார். விஜய், ஹன்ஸிகா, ஜெனிலியா ஆகிய மூன்று பேரின் ஆட்டோகிராஃபை வாங்கி அவர்களது சின்னச் சின்னப் படங்களோடு போஸ்ட் கார்டு அளவில் டிஜிட்டல் பிரிண்டுகளாக எடுத்து ஆட்டோகிராஃப் கேட்கிறவர்களுக்கு கொடுத்து சாமர்த்தியமாக அப்புறப்படுத்தி வருகிறார்களாம். அப்படியும் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் என்கிறார்கள் பொள்ளாசி செய்தியாளர்கள்.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...