mardi 23 novembre 2010

கில்லாடி Vs நண்பன்-பரிசீலணையில் ஷங்கர்!

எந்திரன் என்ற மெகா வெற்றிப் படத்தைக் கொடுத்த ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த படம் “3 இடியட்ஸ் ரீமேக்”. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கவிருக்கிறார் என்பதும்,  இதில் தமிழ் பதிப்பில் விஜய்யுடன், ஜீவாவும்,  ஸ்ரீகாந்த்தும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் அறிந்ததே.
ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் “3 இடியட்ஸ்”தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஷங்கர் “3 இடியேட்ஸ்”க்கு பதிலாக “3 ராஸ்கல்ஸ்” என்று பெயரிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஏற்கனவே கசிந்தது நினைவிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் தமிழில் தலைப்பு வைக்கவேண்டும் என்று விரும்புவதால் இந்த படத்திற்கு “கில்லாடி” மற்றும் “நண்பன்” என்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெறிகிறது. டிசம்பர் 5-ம் தேதி படத்துவக்கவிழா நடைபெறுவதால் அன்றோ அல்லது அதற்கு முன்போ அதிகாரப்பூர்மாக படத்திற்கான தலைப்பை அறிவிக்கவுள்ளனர்.
விஜய்-ஷங்கர் முதல்முறையாக கூட்டணிபோடும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரைத்துரையினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தளபதியுடன் முதல்முறையாக சீனியர் நடிகர் புரட்சி தமிழன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...