திமுக, மதிமுக, என எந்தக்கட்சியில் இருந்தாலும் புலிகளின் ஆதரவாளராக இருப்பவர் கலைப்புலி தாணு. சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும்
பகலவன் படத்தை தயாரிக்க இருந்தார் தாணு. சிறையில் வாடிய சீமானை முதலில் சென்று சந்தித்த திரைப்பிரபலம் தாணு. தற்போது முழுமையாக சீமானுடன் செட்டில் ஆகிவிட்டார் தாணு. மதிமுகவிலிருந்து அவர் விலகியது கூட இந்த தைரியத்தில்தான் என்கிறார்கள்.
ஆனால் இந்த விலகலை தொடர்ந்து பல கட்சிகளும் அவரை தங்கள் கட்சியில் இணைந்து கொள்ள அழைக்கின்றன. என்ன முடிவெடுப்பது என்பதைதான் அவர் ஏற்கனவே தீர்மானித்துவிட்டாராம் தாணு. வைகோவுடன் தாணு இருந்த போது முக்கியமானவர்களுடன் கொண்ட நட்பை இப்போதும் தொடரும் அவர், அதை அப்படியே சீமானுக்கு மடை மாற்றிக் கொடுக்கக் இருக்கிறார் என்கிறார்கள் என்கிறார்கள் தாணுவின் உதவியாளர்கள்.
சிறந்த பொங்கல் பரிசாக நாம் தமிழர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறாராம். ஆனால் திமுகவுக்கு வந்தால் 50 கோடி வட்டியில்லாத கடன் தரத் தயார் என்று சொல்லியிருக்கிறார்களாம் திமுக வட்டாரத்தில். பார்க்கலாம் கலைபுலி எந்த பக்கம் பாயும் என்று.!
Aucun commentaire:
Enregistrer un commentaire