mardi 7 décembre 2010
தடைப்பட்டது '3 இடியட்ஸ்' : விஜய் காரணமா?
இம்மாதம் தொடங்கயிருந்த '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிக்க மறுத்ததாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தன. மேலும், விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று விஜய் ஷங்கரிடம் கூறிவிட்டதாகவும். ஷங்கரும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால் சிலர் இந்தபடத்தில் நடிக்கவே அவர் விரும்பவில்லை என்றும் கூறிவருகின்றனர். அதனால் தான் விஜய் '3 இடியட்ஸ்' படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. ஆனால் விஜய் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. வேலாயுதம் படம் முடிந்த பிறகு '3 இடியட்ஸ்' நடிக்கலாம் என விஜய் இருந்ததாக தெரிகறிது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதால் அவர் இந்த வாய்ப்பை மறுத்ததாக விஜய் தரப்பு கூறி வருகிறது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire