டோலிவுட்டின் இடையழகி இலியானாவை பாலிவுட்காரர்களுக்கு தெரியாது என்பதல்ல. இப்போது அவர் ‘3 இடியட்ஸ்’ ரீமேக்கில் ஹீரோயினாக... அதுவும் ரோபோ இயக்குனர் ஷங்கரின் சாய்ஸ் என்றதும் இலியானாவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்கள். அசின், ஜெனிலியா, த்ரிஷாவைத் தொடர்ந்து தென்னிந்திய அழகியான இலியானா, ரன்பீர் கபூருக்கு இரண்டாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படிருக்கிறார். அனுராக் பாஸூ இயக்கும் இந்தப் படத்துக்கு ‘பர்ஃபி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். முதல் நாயகியாக ப்ரியாங்கா சோப்ரா என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறார்களாம்.
இந்தப் படம் முழுநீள ரொமான்டிக் காமெடியாம். தற்போது இலியானா தெலுங்கு ஹீரோ ராணாவுடன் ‘நேனு நா ராக்ஷசி’ , ஜூனியர் என்.டி.ஆருடன் ‘சக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். டிசம்பர் 7ஆம் தேதி முதல் டில்லி டெக்ராடன்னில் ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire