தன் ‘காவலன்’ படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக நினைக்கிறார் விஜய். ஷங்கரின் ‘த்ரீ இடியட்ஸ்’ படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டி இருக்கிறார் விஜய். இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.
அப்படியே டைரக்டர் ஷங்கரையும் அழைத்து கடிந்து கொண்டதாக கிசுகிசுக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் இருக்கக் கூடாது என்று அவர்கள் நிர்பந்தம் செய்ததால் ஷங்கரின் வேண்டுகோளுக்கு இணங்கிதான் விஜய் விலகிக் கொண்டார் என்றும் பேச்சிருக்கிறது.
ஆனால் விஜய் தரப்போ, த்ரீ இடியட்ஸ் படத்திற்கு கால்ஷீட் பிரச்சனைகள் இருந்தது, அதனால்தான் ஷங்கர் படத்தில் இருந்து விஜய் விலகிக்கொண்டார் என்று சொல்கிறது. இம்மாதம் 17ஆம் தேதி காவலன் யார் தடுத்தாலும் வெளிவரும் என்று சபதமிட்ட படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் அந்த வேலைகளில் பிசியாக இருக்கிறார்.
‘காவலன்’ படத்தின் விளம்பரங்களில் சென்னையில் புக்கிங் செய்யப்பட்ட தியேட்டர்களின் லிஸ்ட்டை மட்டுமே வெளியிட்டிருகிறார்கள். வெளியூர் தியேட்டர்களின் பெயர்கள் எதுவுமே இல்லை. (குறிப்பாக வெளியூர் எடிஷன்களில் இல்லை). இதற்கு முன்பு திரையரங்க உரிமையாளர்கள் விஜய்யை நம்பி ஐந்து படங்களில் மோசம் போனதும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.
அரசியலில் எந்தப் பக்கம் சாயப் போகிறார் விஜய்? விஜய்யின் சினிமா பாதையில் நிகழப்போகிற திருப்பங்கள் என்ன? எனபதே இளைய தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்…
இதில் இன்னொரு சூடான செய்தி ‘த்ரீ இடியட்ஸ்’ படத்திற்காக சூர்யாவிடம் பேசிவிட்டாராம் ஷங்கர்!
Aucun commentaire:
Enregistrer un commentaire