மழையால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி வழங்கினார்விஜய். அப்படியே 'காவலன்' படத்தின் ட்ரெய்லரையும் பாடல் சிடியையும் கூட வெளியிட்டார்கள் அதே நிகழ்ச்சியில். ஏன் மூன்றையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்? அதற்கு விஜய்யின் பிஆர்ஓ செல்வகுமார் சொன்ன காரணம் அப்படியே கீழே-
இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும். அதில் விஜய் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் அழைத்தார். ஆனால் விஜய், "அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். செய்தி தாளில் விளம்பரம் கொடுத்துவிட்டு ரிலீஸ் செய்தால் போதும்" என்று கூறிவிட்டார். அப்படியெல்லாம் பிடிவாதமாக இருந்த விஜய், 300 ஏழைகளுக்கு அரிசி மூட்டை வழங்கலாம் என்று சொன்னவுடன் அதில் கலந்து கொள்ள சம்மதித்தார். அப்படியே ட்ரெய்லர், பாடல்களையும் இங்கேயே வெளியிட்டு விடலாமே என்று முடிவு செய்யப்பட்டது என்றார் அந்த மேடையில்.
நிகழ்ச்சியில் யார் யாரோ பேசினாலும் காவலன் படத்தை வாங்கி வெளியிடும் டைரக்டர் ஷக்தி சிதம்பரத்தின் பேச்சுதான் டாப்! "சமீபத்தில் திருப்பதிக்கு போயிருந்தேன். கீழ் திருப்பதியிலிருந்து நடந்தே மேல் திருப்பதிக்கு போனேன். ஆனால் தரிசன நேரத்தில் ஜருகண்டி என்று வேகமாக பிடித்து தள்ளிவிட்டார்கள். சாமியை சரியாக பார்க்க முடியலையே என்ற கவலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு உண்டியலில் உள்ள காணிக்கைகளை எடுத்துச் செல்லும் ஒரு கோயில் ஊழியர் என்னை அழைத்து ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னார். அந்த காணிக்கைகள் சீல் செய்யப்பட்டதை உறுதி செய்ய பக்தர்களில் ஓருவர் இப்படி கையெழுத்து போடுவது வழக்கமாம்.
நான் கையெழுத்து போட்டதும் திரும்பவும் கோவில் சார்பாகவே என்னை தரிசனத்திற்கு போக சொன்னார்கள். நின்று நிதானமாக பத்து நிமிடம் சாமி கும்பிடவும் அனுமதி கிடைத்தது. அன்று அந்த திருமலையை பார்த்தபோது நான் எப்படி மகிழ்ச்சி அடைந்தேனோ, அதை மகிழ்ச்சியை இந்த திருமலையின் படத்தை வாங்கிய போதும் மகிழ்ந்தேன். இந்த படத்தை வெளியிட சிக்கல்களை ஏற்படுத்துகிறவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். காவலன் இம்மாதம் 17 ந் தேதி ரிலீஸ். அதை யாராலும் தடுக்க முடியாது என்றார் ஆக்ரோஷமாக!
Aucun commentaire:
Enregistrer un commentaire