
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே புதுப்புது ஸ்டைலில் வரப் போகிறார் வடிவேலு. ஒரு காட்சியில் இவர் உடல் முழுக்க காந்தத்தால் ஆன கோட் அணிந்து கொண்டு வருவாராம். யேய்... எனக்கு எதிரி எவனாயிருந்தாலும் அவன் கையில் வச்சிருக்கிற ஆயுதம் என்னை தாக்குவதற்கு முன்னாடியே என் கோட்ல பறந்து வந்து ஒட்டிக்கும். எப்படி நம்ம ஐடியா? என்று மார்தட்டுவாராம் வடிவேலு. அந்த நேரம் பார்த்து ஒரு தண்ணி லாலி அந்த பக்கம் வர, லாரியின் பாடி இரும்பும், வடிவேலு பாடியின் காந்தமும் ஒட்டிக் கொள்ள, லாரியோடு லாரியாக பறப்பாராம் வடிவேலு. யோசிக்கும் போதே பொத்துக் கொள்கிறதா சிரிப்பு?
இவர் இப்படி என்றால், இதே மாதிரி ஸ்டைலில் ஒரு காட்சியை யோசித்து வைத்திருக்கிறார் விவேக். இது விஷால் நடிப்பில் பிரபுதேவா இயக்கப்போகும் பெயர் வைக்காத படத்திற்காக.
சிக்ஸ்பேக் வயிற்றை காட்டி ஃபிகர்களை மடக்க வேண்டும் என்று பிளான் போடும் விவேக்கின் வயிற்றில் கேஸ் பலு£னை கட்டி விட்டுவிடுவாராம் அவரது நண்பர் செல் முருகன். அப்புறம் என்ன? விவேக் அப்படியே அந்தரத்தில் பறக்க, மீண்டும் எப்படி தரையிறங்குகிறார் என்பது ஒரு காட்சி!
காப்பியா இருந்தாலும் கலகலப்புக்கு இருக்கிற ருசியே தனிதான்.
Aucun commentaire:
Enregistrer un commentaire