இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனு மீதான வழக்கு விசாரணையின்போது சட்டத்தினை ஒருவர் மீது பிரயோகிக்க மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என, சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார். சீமானுக்கு எதிராக கூடுதல் மாநகர ஆணையர் பிறபித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டினர். எனவே, சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் விடுதலை ஆனார் .
இதையடுத்து நடிகர் விஜய்யை வைத்து பகலவன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் , இதற்கான கதையை சீமான் சிறையிலேயே எழுதிவிட்டாராம் . இந்த படத்தின் மூலம் விஜய்க்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என படத்தின் வட்டாரங்கள் கூறுகின்றனர் .
விஜய்யின் காவலன் படத்தில் நடித்து முடித்து விட்டார் . இப்படம் பொங்கல் அன்று வெளிவர இருக்குறது . இதையடுத்து டைரக்டர் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் என்ற படத்தை இயக்கி வருகிறார் . இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறது . இன்னும் த்ரி இடியட்ஸ் என்ற குழப்பும் உள்ளது .
பின்பு விஜய் வேலாயுதம் படத்தை முடித்த உடன் சீமான் இயக்கத்தில் பகலவன் என்ற படத்தை இயக்குவார் என தெரிகிறது . சீமான் இப்போது விஜய்க்காக பகலவன் படம் இயக்க காத்திருக்கிறார் .....
Aucun commentaire:
Enregistrer un commentaire