நடிகர் விஜய் நடித்த “காவலன்” படத்துக்கு தடை விதிக்க கோரி, கோகுலம் நிதி நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கில் கூறியிருப்பதாவது :
அந்த வழக்கில் கூறியிருப்பதாவது :
பாடி கார்ட் என்ற மலையாள படத்தை தயாரிப்பதற்காக நிதி கேட்டு ஜானி சகரிகா சினிமா ஸ்கொயர் நிறுவனம் எங்களை அணுகியது. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ரூ.3.90 கோடி கடன் வழங்கினோம். அப்போது “பாடிகாட்” படத்தின் பிறமொழி பதிப்புரிமையை எங்களுக்கு தரவேண்டும் என்று கேட்டோம். அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள “காவலன்” என்ற சினிமா, ‘பாடிகாட்’ படத்தின் கதையை கொண்டதாகும்.
“பாடிகாட்” கதையை மற்ற மொழிகளில் தயாரிக்கும் உரிமையை கோகுலம் நிறுவனம்தான் பெற்றுள்ள நிலையில், அந்த கதையை தழுவிய “காவலன்” படத்தை ரோமேஷ்பாபு தயாரித்துள்ளார். மேலும் நாங்கள் கொடுத்த தொகையில் மீதி ரூ.1.88 கோடியை ஜானி சகரிகா நிறுவனம் தரவில்லை. எனவே அந்தத் தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும். எங்களிடம் பதிப்புரிமை உள்ளதால் மற்றவர்கள் அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
“காவலன்” படம் வெளியிடப்பட்டு விட்டால், பாக்கி தொகையை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு, ஜானி சகரிகா நிறுவனத்துக்கு இருக்காது. அதனால் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பெரிய பட்ஜெட்டில் “காவலன்” படம் தயாரிக்கப்பட்டு இருப்பதால் குறித்த நேரத்தில் படத்தை வெளியிடாவிட்டால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று ரோமேஷ்பாபு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே 1 கோடியே 88 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு “காவலன்” படத்தை திரையிடலாம் என்று உத்தரவிட்டார்.
தற்போது அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு வந்திருக்கும் “காவலன்” பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இந்த பொங்கல் தளபதி ரசிகர்களுக்கு “டபுள் ட்ரீட்டாக” அமையவிருக்கிறது “காவலன்” மூலமாக.
Aucun commentaire:
Enregistrer un commentaire