jeudi 9 décembre 2010

பசு, அரிசி தானம் – விஜயின் வில்லத்தனம்

சில நாட்களுக்கு முன்னர் உடுமலைப்பேட்டையில், ஏழை எளியவர்களுக்கு இளையதளபதி விஜய் 130பசு மாடுகளை தானமாக வழங்கினார். விஜயின் உதவியை பெற்ற பலரும், கலியுக கடவுள்(?) என்றே அவரை பாராட்டிச் சென்றனர். ‘வேலாயுதம்’ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக இந்த ‘பசு தானம்’ வழங்கப்பட்டது.
தற்பொழுது விஜய் மீண்டும் 300 அரிசிப் பைகளை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் அரிசி பைகளுக்கான மொத்த செலவை சக்தி சிதம்பரமும், பசுக்களுக்கான செலவை ஆஸ்கார் ரவிச்சந்திரனும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
‘காவலன்’ படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழாவிற்கு முதலில் வர மறுத்த விஜய், ‘அவரது பெயரால் அரசிப் பைகள் வழங்கப்படும்’ என்று தயாரிப்பு தரப்பு கூறியவுடன் தான் வர சம்மதித்தாராம். இவ்வாறு பிறர் பணத்தில் விஜய் அரசியல் ஆதாயம் தேட, ரவிசந்திரனும், சக்தி சிதம்பரமும் விஜய் மீது கோபத்தில் உள்ளனராம்.
விஜயின் இச்செயல்கள் அரசியலில் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதையே காட்டுகிறது. மற்றவர் பணத்தை செலவிட்டு, தனது பெயரை நிலைநாட்டுகிற அரசியல் தந்திரத்தை விஜய் அழகாக கற்றுக் கொண்டிருக்கிறார்.
அட படத்துக்கு தயாரிப்பாளர் காசுலதானே விளம்பரம் செய்யணும்.. இதைப்போய் பெருசா பேசுறீங்க?
விஜய் ரசிகர்களுக்கு : இது செய்தி, நறுமுகைக்கு விஜய் மீது தூற்றுவது நோக்கமல்ல..

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...