dimanche 12 décembre 2010

கேப்டனுக்கு கடுக்காய்! தளபதிக்கு கல்தா!


கேப்டன் விஜயகாந்த் நடித்து இயக்கி, டூயட் பாடியிருக்கும் விருதகிரி படம் இன்று ரிலீஸ். ஆனால் கேப்டனின் படத்துக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க விநியோகஸ்தர்களோ, தியேட்டர் உரிமையாளர்களோ  முன்வரவில்லையாம். ஆறுதலுக்கு சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் விருதகிரியை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

விருதகிரி படத்தின் இசை வெளியீட்டை மாநாடுபோல நடத்தி அதில் பேசிய கேப்டன், ‘எனது படத்தை வெளியிடவிடாமால் ஆளுங்கட்சி சதி செய்கிறது’ என்றெல்லாம்  பேசினார். அவர் பேசியது உண்மைதானா என்று விநியோகஸ்தர்களைக் கேட்டால் கொதித்துப் போய் பதி சொல்கிறார்கள். “இதற்கு முன்பு கேப்டனின் படங்கள் கொடுத்த துக்கடா வசூல்தான் எங்களை யோசிக்க வைக்கிறது. மீண்டும் நாங்கள் விஷப்பரீட்சை செய்து பார்க்க முடியாது’’ என்கிறார்கள்.  இதையும் மீறி தனது கட்சிக்காரர்கள்  ‘பலருக்கு வச்சுக்குங்க…! அட வச்சுங்குங்கப்பா’ என்று  படத்தைக் கையில் திணித்து கிடைக்கிற தியேட்டரில் ரிலீஸ் செய்யயுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறாராம்.  இதைவிட பெரிய அதிரடி டிசம்பர் 17 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள விஜயின் காலவலன் படத்துக்கு சென்னைக்கு வெளியே நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் காவலனை டிசம்பர் 26-க்கு தள்ளி வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம் சக்தி சிதம்பரம் தரப்பில். கேப்டனுக்கு கடுக்காயும், தளபதிக்கு கல்தாவும் கொடுக்கிறார்களே என்று கொதித்துக் கிடக்கிறார்களாம் இருதரப்பு ரசிகர்களும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...