பொதுவாகவே ஒரு படத்தை முடித்தவுடன் விஜய் வெளிநாடு சுற்றுலா செல்வது வழக்கம். அதுபோல் “காவலன்” படம் முடிந்ததும் சமீபமாக அமெரிக்கா சென்ற விஜய்,.. |
....அங்கு சில நாட்கள் தங்கியதோடு மட்டும் அல்லாமல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த “காவலன்”‘ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அரங்கத்திற்குள் நுழைந்தவுடனே இளைய தளபதி… என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதை பார்த்த விஜய் உற்சாகமானார். அவர்களிடம் பேசிய விஜய், உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்த ஆதரவை பயன்படுத்திக் கொள்ளாமல் சில வெற்றியடையாத படங்களை கொடுத்து விட்டேன் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அது நான் செய்த தவறுதான். ஆனால் இப்போது வர இருக்கும் “காவலன்” படம் நீங்கள் ரசிக்கும்படி இருக்கும் என நினைக்கிறேன். கத்தி, அருவா, துப்பாகி எல்லாத்தையும் தூக்கிப் போட்டு விட்டு மீண்டும் ஒரு காதல் படத்தின் நடித்திருக்கிறேன் என்று ரசிகர்களிடம் சொன்ன விஜய், அவர்களிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். நீங்கள் வெளிநாட்டுக்கு கொடுக்கின்ற உழைப்பை, கொஞ்சம் தமிழ் நாட்டுக்கும் கொடுங்களேன் என்று சொன்னார். அதுமட்டும் இல்லாமல் விஜய் பாட்டு பாடியே ஆகவேண்டும் என ரசிகர்கள் சொல்ல… “நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவை இல்லை”‘ என்று அவர் பாடினதும் அரங்கமே ஆட்டம் போட்டது. |
mardi 21 décembre 2010
நான் செய்த தவறு : வருத்தப்பட்ட விஜய்!
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire