samedi 8 janvier 2011

கண்ணபிரான் படத்தில் ப்ரியாமணி?

பருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் ப்ரியாமணி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் 30 படங்களில் நடித்து முடித்துவிட்ட ப்ரியாணிக்கு முத்தழகு போன்ற ஒரு அழுத்தமான பாத்திரம் கிடைக்கவே இல்லை. ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரமும் சரி, மணிரத்தனத்தின் ராவணனும் சரி - இரண்டுமே துண்டு துக்கடா ஆகிவிட்டது . தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம் என்று கமர்ஷியல் கதாநாயகியாக ப்ரியாமணி நடித்த படங்களும் தோல்வியைத் தழுவியதால் இங்கே வாய்ப்புகளும் அவருக்கு வற்றிப் போய்விட, அமீரின் ஆதிபகவனில் தனக்கு நிச்சயம் வாய்ப்புக் கொடுப்பார் என்று காத்திருந்தாராம் ப்ரியாமணி. ஆனால் எதிர்பாராமல் நீத்து சந்திராவை அமீர் தேர்ந்தெடுத்ததால் ஏமாற்றத்தில் முடிந்தது ஆதிபகவன் வாய்ப்பு.


இப்போது பொறுக்க முடியாமல் அமீரையே நேரில் சந்தித்து அடுத்தப் படத்தில் எனக்குக் கட்டாயம் வாய்ப்பு வேண்டும், அதுவும் முத்தழகு போன்ற ஒரு கதாபாத்திரம் வேண்டும் என்று கேட்டு சரணடைந்திருக்கிறாராம். பொறுமையாக இருக்கும்படி அமீர் சொல்லியிருக்கிறாராம் .


ஆதிபகவனுக்கு அடுத்து அமீர் இயக்கும் படத்தில் நிச்சயமாக ப்ரியாமணி இருப்பார் என்கிறார்கள் இயக்குனரின் நட்பு வட்டத்திலிருந்து. 


 அப்படி ஆனால் அமீர் இயக்க இருக்கும் படமான கண்ணபிரான் படத்தில் விஜயுடன் முதல் முறையாக ஜோடி சேருவார என்று பார்ப்போம்.


Wait And  See .............


And See More News Here

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...