அஜீத்தும் விஜய்யும் கூடி கூடி பேசுகிறார்கள். தனக்கு எதிராக திரையுலகத்தில் ஒரு பெரும் கும்பல் கூடிவருவதாக அஞ்சுகிறாராம் விஜய். இவருக்கான எதிரிகளில் சிலர் அஜீத்திற்கும் எதிரிகள். இதனால் தங்கள் பொது எதிரிகளை எப்படி சமாளிப்பது என்ற நோக்கத்தில்தான் இந்த சந்திப்பு அமைவதாக கருதுகிறார்கள் திரையுலகத்தில்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் பலரது கண்களை உறுத்துவதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை அவருக்கு உணர்த்திய அஜீத், தேவைப்பட்டால் நானே உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று மட்டும் இப்போதைக்கு கூறியிருக்கிறாராம்.
முதலில் தங்கள் ரசிகர்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் அப்போது முடிவு செய்திருக்கிறார்களாம். இன்னும் போக போக இரட்டை குழல் துப்பாக்கிகளாக இவர்கள் வெடிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire