jeudi 13 janvier 2011

அதிரடியாக கோதாவில் இறங்கிய விஜய்-வர்ரான் காவலன்!

விஜய் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி.  நேற்று மாலை சுமார் ஏழு மணியளவில் கூடிய முக்கியஸ்தர்களின் பேச்சு வார்த்தையை அடுத்து காவலன் பிரச்சனையில் பெருமளவு முன்னேற்றமாம். “இது வெறும் படமல்ல… என் பிரஸ்டீஜ்” என்று கூறிவிட்டாராம் விஜய். “எப்பாடு பட்டாவது பொங்கலுக்கு வெளியிட்டு விட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாரராம் அவர். விளைவு? அவரது சொந்தப்பணத்திலிருந்து சில ‘சி’ க்கள் காலி!
ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிட இருந்த இந்தப்படம் இப்போது முக்கியமான பைனான்சியர் ஒருவரின் கைகளிலும் மற்றும் விஜய்யின் கைகளுக்கும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஷக்தி சிதம்பரம் கொடுத்திருந்த முன் பணத்தை திரும்ப கொடுத்துவிடலாம் என்றெல்லாம் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாம். பெருக்கல், கூட்டல், மைனஸ், பர்சன்டேஜ், என்று பெரும் கூச்சலோடு நடந்து முடிந்தது கூட்டம். ஆனால் விடை என்னவோ சுபம்!
இதற்கிடையில் எல்லா தியேட்டர்களுக்கும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்திலிருந்து ஒரு கடிதம் போயிருக்கிறது. விஜய் படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்று அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல… இதுதான் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் எச்சரிக்கை!
கூந்தலில் பூ வைக்கலேன்னாலும் பரவாயில்லை, பிளேடு வைக்காம இருந்தா போதும்!

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...