கல்லால் அடிக்காத குறையாக கலவரப்படுகிறார் விஜய் ஆன்ட்டனி. எந்த நேரத்தில்விஜய் வீட்டுக்கு தனது ரெக்கார்டிங் தியேட்டரை மாற்றினாரோ, சமைஞ்ச பொண்ணு மாதிரி கதவையே திறப்பதில்லை அவர். அதற்கு காரணமும் இருக்கிறது.
பீஸ் புல்லா இருக்கலாம்னு இங்க வந்தா, கத்தி கத்தியே நம்ம பீஸ், ஃபுல்லா இறங்கிடும் போலிருக்கே என்று கலங்கிக் கொண்டிருக்கிறாராம் இந்த இசையமைப்பாளர். வேறு வழியில்லாமல் ஸ்பெஷலாக இரண்டு வாட்ச்மேன்களை போட்டிருக்கிறாராம் இப்போது. அவர்களும் காச் மூச் என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களிடம். விளைவு? ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் என்ற பழமொழிக்கு தகுந்த மாதிரி, விஜய் ஆன்ட்டனியின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு ரெட்டை கதவு போடப்பட்டிருக்கிறது!
Aucun commentaire:
Enregistrer un commentaire