jeudi 13 janvier 2011

காவலனுக்கு ஐகோர்ட் அனுமதி!

பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் காவலன் படத்தை வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

விஜய் நடித்த காவலன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடலாம் என திட்டமிட்டனர். இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி சர்வதேச வெளியீட்டு உரிமை பெற்ற சிங்கப்பூரை சேர்ந்த சந்திரா எண்டர்பிரைசஸ் நிறுவனம், விநியோக உரிமை பெற்ற சினிடைம் எண்டர்பிரைசஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

காவலன் படத்தின் விநியோக உரிமை பெற்ற தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் ஒரு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்து இருப்பதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மலையாள படமான பாடிகார்ட் படத்தை விலைக்கு வாங்கிய கோகுலம் சிட் பண்டஸ் நிறுவனமும் இயக்குனர் சித்திக்கிற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தது. தங்கள் அனுமதி இல்லாமலேயே இயக்குனர் சித்திக் இந்த படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கி இருப்பதாக குற்றம் சாட்டியது.

காவலன் சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் நீதிபதி ராமசுப்பிரமணியன் விசாரித்தார்.

காவலன் படத்தை திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு வெளியிடலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதற்கு முன்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் கோரிய ரூ.15 கோடியை உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையையும் வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஒருவழியாக விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து வைக்க வருகிறது காவலன்!

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...