vendredi 7 janvier 2011

விஜய் அஜித்தின் நட்பு பாராட்டு

'தல-தள'ன்னாலே ஒரே கொழப்பமாயிருக்குது என்கின்றனர் சுத்து வட்டாரத்தில்.
வெளியில் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் அவர்களின் தலயும், தளபதியும் பண்டிகை - விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர். இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை.
அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக 'மங்காத்த'‘வில் அஜித் படுபிஸி.
விஜய்யோ 'காவலனை' முடித்து விட்டு, 'வேலாயுதத்தின்' இறுதி ஷெட்யூலில் இருக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜித்தும், விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர். பின்பு இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்தனர்.
விஜய்க்கு அஜித் பிரியாணி கொடுத்து அசத்த பதிலுக்கு ப்ரேஸ்லெட் ஒன்றை விஜய், அஜித்துக்கு அணிவித்து இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். அப்போது 'மங்காத்தா' பட இயக்குநர் வெங்கட் பிரபு, வைபவ் மற்றும் ப்ரேம்ஜி உடனிருந்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...