தியேட்டர் உரிமையாளர்கள் நீ நான் என்று முன்வந்து சிறுத்தை படத்துக்கு தியேட்டரைக் கொடுக்கிறார்களாம். இப்படி முன்வந்த தியேட்டர்கள் மட்டும் 400 என்கிறார்கள். இதில் மிகவும் அடிபட்டது காவலன் படம்தான். ஏற்கனவே விஜய் படங்களில் நஷ்டம் என்று இருந்த சர்ச்சை காரணமாக “ நாங்கள் சிறுத்தைக்கு கொடுத்துவிட்டோம். ஆடுகளத்துக்கு கொடுத்துவிட்டோம்” என்று ட்ரீட்மெண்ட் கொடுப்பதில் இன்னும் 200 தியேட்டர்களைக்கூட நெருங்க வில்லையாம் காவலன்.
இன்னொரு பக்கம் கலைஞரின் இளைஞன் படத்துக்கு 350 தியேட்டர்கள் ரெடி என்கிறார்கள். இதில் எதிர்பாராத திருப்பமாக ஆடுகளம் படத்துக்குத் தற்போது கிடைத்துள்ள 180 தியேட்டர்களை எங்களுக்கு விட்டுத்தர முடியுமா என்று கேட்டிருக்கிறார்களாம் சன் பிக்ஸர்ஸிடம். இன்னும் விஜய்க்கு பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வரும் சன் பிக்ஸர்ஸ், விஜயின் காவலன் படத்துக்கு தியேட்டர்களைக் கொடுத்துவிட்டு இரண்டு வாரங்கள் கழித்து ஆடுகளைத்தை ரிலீஸ் செய்துகொள்ளலாமா என்று யோசித்து வருகிறார்களாம்!
வசூல் சக்ரவர்த்தி என்று பெயர் வாங்கிய விஜய் படத்துக்குத் தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுவது இதுதான் முதல் தடவை.
Aucun commentaire:
Enregistrer un commentaire