முன்னணி இயக்குநர் ஷங்கரையும், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தையும் ரொம்பவே வாட்டிவிட்டது தமிழ் ’3 இடியட்ஸ்’. இந்த படம் அவ்வளவுதான் என்று நினைக்கு அளவுக்கு பல சிக்கல்களை சந்தித்த ஜெமினி நிறுவனம், தற்போது அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ளது.
இதில் முதல் நாயகனாக விஜய் நடிக்க, ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் மற்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கு ‘நண்பன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பலர் நடிக்க, இயக்குநர் எஸ்.ஜெ.சூர்யா, அனுயா, அஜய்ரதனம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே ஊட்டியில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜெ.சூர்யா, அனுயா, அஜய்ரத்னம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். விஜய் பங்குபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு பிப்ரவரி 25ஆம் தேதி முதல் படமாக்கப்படவுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, நா.முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார். மதன் கார்க்கியுடன் இணைந்து ஷங்கர் இப்படத்தின் வசனத்தை எழுதுகிறார்
Aucun commentaire:
Enregistrer un commentaire