ஒரு வழியாக '3 இடியட்ஸ்' படத்தின் ஹீரோ விஜய் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் தன்னைப் பற்றிய செய்திகளால் கொஞ்சம் டென்ஷனாகி இருப்பதால், தான் ஏன் இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொண்டேன் அல்லது நீக்கப்பட்டேன் என்பதை பற்றி சூர்யா ஒரு விளக்கம் தர இருப்பதாகவும் செய்தி. சரி... அதெல்லாம் இருக்கட்டும்.
ஷங்கரின் படத்தின் டைட்டில்கள் எல்லாமே 'ன்' எழுத்தில் முடிவது வழக்கம் ( பாய்ஸ், சிவாஜி தவிற ). ஜென்டில் மென், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன். இந்தப் படத்திற்கும் 'நண்பன்' என்ற டைட்டிலை தேர்வு செய்திருக்கிறார் ஷங்கர்.
தன் போக்கிரி படத்தில் எப்படியாவது இலியானாவுடன் டூயட் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார் விஜய். தொடர்ந்து வந்த படங்களிலும் அது அவருக்கு அமையாமலே போனது. நண்பன் படம் ஷங்கர், இலியானா என்ற இரட்டை சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது விஜய்க்கு. 3 இடியட்ஸ் விஷயத்தில் விஜய் ரீஎன்ட்ரி ஆகியிருப்பதற்கு காவலனின் சக்சஸ் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire