மணிரத்னம் இயக்கவிருக்கும் படம் ஒன்றில் விஜய்-விக்ரம்-விஷால் இணைந்து
நடிப்பதாக ஒரு செய்தி வெளிவந்தது முன்னணி நாளிதழ் ஒன்றில்! விசாரித்தால் அப்படியே உல்டாவாக இருக்கிறது சமாச்சாரம்! 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது மணிரத்னத்திற்கு. அதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் அவர். ஆனால் அப்படத்தில் விஜய்-விக்ரம்-விஷால் மூவரும் இணைகிறார்களா என்பதுதான் கேள்வி.
த்ரி இடியட்ஸ் படத்தில் விஜய்-சிம்பு-தனுஷ் மூவரையும் நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் முதலில் விரும்பினார் ஷங்கர். ஆனால் பட்டுப்போன மரத்தையே துளிர்க்க வைத்து விடலாம். இந்த ஒட்டு போட்ட ஆசையை நிறைவேற்றவே முடியாது என்பதை புரிந்து கொண்டார் ஷங்கர். காரணம் ஹீரோக்கள் மத்தியில் தலை விரித்தாடும் ஈகோதான்! அப்புறம் அவரது ஆசை மெல்ல மெல்ல இறங்கி மாதவன்-சித்தார்த் என்று போனது. ம்ஹ¨ம், கடைசியாக அவருக்கு விதிக்கப்பட்டது ஜீவாவும், ஸ்ரீகாந்தும்தான். கிட்டதட்ட இதே நிலைமைதான் மணிரத்னத்திற்கும்!
இந்த புதிய படத்தில் நடிக்க 'எஸ்' சொல்லியிருப்பது விக்ரம் மட்டுமே! மற்றபடி மணிரத்னம் நாடும் பிற ஹீரோக்கள் யாரும் இவரது 'கூட்டு குடிநீர்' திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஷங்கருக்கு ஏற்பட்ட அனுபவமே மணிக்கும் அமையும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அப்ப விஜய்-விக்ரம்-விஷால்ங்கறது? யாரோ கிளப்பிவிட்ட ஜோக்!

Aucun commentaire:
Enregistrer un commentaire