ரசிகர்களை சந்திப்பதற்காக நடிகர் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஆயத்தப் பணிகள் ரகசியமாய் நடக்கின்றன. இரு மாதங்களுக்கு முன் ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை சென்னைக்கு அழைத்து பேசினார். அவர்கள் ஒட்டு மொத்தமாக விஜய் அரசியலில் ஈடுபட வற்புறுத்தினர்.
இதுதொடர்பாக ரசிகர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே நேரம் இந்த தேர்தலில் தனது பங்களிப்பும் ரசிகர்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என கருதுகிறார். அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பது அவர் இலக்காக தெரிகிறது.விஜய் தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இரண்டு முறை ஜெயலலிதாவை சந்தித்து விட்டார். அவர் கட்சியில் இணைந்து ஏதேனும் தொகுதியில் போட்டியிடுவார் என பேச்சு நிலவுகிறது.
விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இரு மாதங்களுக்கு முன் இதுபோல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு ரசிகர்களை சந்தித்தார். உதவிகளும் வழங்கினார். அதே மாவட்டங்களுக்கு மீண்டும் சென்று ரசிகர்மன்ற கூட்டங்களில் பேசுகிறார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire