டைரக்டர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் நாவலை டைரக்டர் மணிரத்னம் படமாக எடுக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் நாவல் படித்த அத்தனைபேரின் இதயங்களையும் கொள்ளையடித்த வந்தியத் தேவன் கேரக்டரில்தான் விஜய் நடிக்கப் போகிறார். படத்தில் விஜய் தவிர விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டோரும் முக்கியே கேரக்டர்களில் நடிக்கிறார்கள். தற்போது நாயகர்களுக்கு பொருத்தமான நாயகிகளை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கும் மணிரத்னம், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அதற்கான முழுமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். கதைக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறேன். அத்தனை கேரக்டர்களுமே முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள்தான், என்கிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire